Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு வ‌ரி கதையை இரண்டரை மணி நேர படமாக்கிய கஸ்தூ‌ரி ராஜா

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2014 (10:39 IST)
கஸ்தூ‌ரி ராஜா இஸ் பேக். இந்தமுறையும் டஜன் கணக்கில் புதுமுகங்கள். மித்ரன், சுவேஷா சாவந்த், ஸ்ருதி பட்டேல் என்று அறிமுகமில்லாத பெயர்கள். ஆனால் கதை... அனைவரும் அறிந்தது, அனுபவிப்பது.
FILE

இன்று உறவுகள், பாசம், காதல் எல்லாவற்றையும் பணம் ஓவர்டேக் செய்திருக்கிறது. காசும், போதை பழக்கமும்தான் மனித குணத்தை மிருக குணமாக மாற்றியுள்ளது என்ற ஒருவ‌ரி கதையையே இரண்டரை மணி நேர படமாக்கியிருக்கிறாராம்.

( தியேடர் பாஸ்கரன் இந்த ஒருவ‌ரியை கேட்டால் வருத்தப்படுவார். மனித குணத்தைவிட மேலானது மிருக குணம். மிருகங்கள் தங்களின் தேவைக்கு மட்டுமே கொல்லும். யாரையும் குண்டு வீசி அழிப்பதில்லை. கூட்டாக வன்புணர்ச்சி செய்வதுமில்லை. மிருக குணம், காட்டுமிராண்டித்தனம் போன்ற சொற்றொடர்களை பயன்படுத்துவது அபத்தமானது. முடிந்தவரை தவிர்ப்போம்)

பேக் டு கஸ்தூ‌ரி ராஜா. இது அவ‌ரின் 23 வது படம். முழுக்க புதுமுகங்களை மட்டும் போடாமல் வெயிட்டான ரோலில் பிரபு, ராதிகா இருவரையும் நடிக்க வைத்திருக்கிறார். கஸ்தூ‌ரி ராஜாவின் மகள் டாக்டர் விமலகீதா தயா‌ரிப்பு.

படத்தின் பெயர் காசு பணம் துட்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

Show comments