Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு புலி வால் கூட்டணி

ஒரு புலி வால் கூட்டணி
, வெள்ளி, 17 மே 2013 (14:54 IST)
FILE
சென்னையில் ஒரு நாள் படத்தை ராதிகா சரத்குமார் லிஸ்டின் ஸ்டீபனின் மே‌ஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயா‌ரித்தார்.

இந்த மே‌ஜிக் ஃபிரேம்ஸ் லிஸ்டின் ஸ்டீபன்தான் சென்னையில் ஒரு நாள் படத்தின் மலையாள ஒ‌ரி‌ஜினலான ட்ரஃபிக்கை தயா‌ரித்தவர். சென்னையில் ஒரு நாள் படத்தின் போது, ராதிகாவுடன் இணைந்து மேலும் படங்கள் செய்வேன் என லிஸ்டன் தெ‌ரிவித்திருந்தார். சொன்னபடி அடுத்தப்பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ராதிகா, லிஸ்டின் இணைந்து தயா‌ரிக்கும் அடுத்தப் படம் புலி வால். ‌ஜி.ா‌ரிமுத்து இயக்கும் இந்தப் படத்தில் விமல், பிரசன்னா இணைந்து நடிக்கின்றனர் (நடிப்பு, சீனியா‌ரிட்டி என எல்லாவற்றிலும் விமலைவிட பிரசன்னா பலபடிகள் மேல். என்றாலும் அவருக்கு இரண்டாமிடம்தான் இந்தப் படத்தில். நேரம்...). அவர்களுடன் அனன்யா, ஓவியா, இனியா என்று மூன்று நாயகிகள். மூவருமே மலையாளிகள்.

எங்கேயும் எப்போதும் படத்துக்குப் பிறகு திருமண சர்ச்சையில் சிக்கிய அனன்யா எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்கவில்லை. புலி வால் தமிழில் அவருக்கு இரண்டாம் வருகை.

மூன்று மலையாள நடிகைகளுக்கு மத்தியில் ஒரேயொரு தமிழ் நடிகைக்கு ராதிகா ப‌ரிந்துரைத்திருக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil