Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு நடிகையின் கதை

Webdunia
செவ்வாய், 5 மே 2009 (19:50 IST)
நடிகையின் கதையை படமாக்குவதில் ஒரு வசதி. காதல், காமம், சென்டிமெண்ட், ஆக்சன், த்ரில் என நவரசங்களுக்கும் பஞ்சமிருக்காது. இவற்றைத் தேடித் திணிக்க வேண்டியதில்லை. தானாகவே சேர்ந்துவிடும்.

' ஆனைவாரி' ஏ. ஸ்ரீதர் (ஞான பீட விருது பெற்ற பிரபல எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர், ஆனைவாரியும் பொன்குருசும் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அதில் வரும் ஆனைவாரி அல்ல இது. இடத்தின் பெயரை பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொண்டிருக்கிறாராம்). இவர் இயக்கும் வேடப்பன் ஒரு நடிகையின் கதை.

புகழின் வெளிச்சத்துக்கு வந்த பின் பழசை மறந்து ஆட்டம் போடும் நடிகையை அவரது தீவிர ரசிகனே சுட்டுக் கொல்கிறான். ஏன் எதற்கு இந்த கொலை என்பதை அலசுகிறது வேடப்பன்.

இதில் நடிகையாக அப்சரா நடிக்கிறார். கன்னடப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரின் முதல் தமிழ்ப் பிரவேசம். நடிகையாக வருவதால் கிளாமரில் எக்ஸ்ட்ரா தள்ளுபடி செய்திருப்பதாக அவரே பூரிக்கிறார். பூஜை போஸ்டர் எதுவுமின்றி படத்தை தொடங்கி முப்பதே நாளில் படத்தை முடித்திருக்கிறார்கள்.

படத்தின் ஹீரோ ஹேமந்த் குமார். நிகிதாவும் உண்டு. டி.ஆர்.கே. மூவிஸின் இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

துறவியாக மாறிய நடிகை.. கோவில் கோவிலாக செல்ல முடிவு..!

ஓடிடியில் ரிலீஸான பின்னரும் மாஸ் காட்டும் லக்கி பாஸ்கர்.. தியேட்டரில் குவியும் ரசிகர்கள்!

கீர்த்தி சுரேஷ் திருமண தேதி அறிவிப்பு.. இணையத்தில் வைரலாகும் பத்திரிகை புகைப்படம்..!

மீண்டும் ஆஸ்கர் வெல்வாரா ஏ.ஆர்.ரஹ்மான்? ஆஸ்கர் விருதில் ஆடுஜீவிதம்!

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!