Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப். 18 நண்பேன்டா ஃபர்ஸ்ட் லுக்

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (13:26 IST)
இரண்டுநாள் ஓடுகிற படங்களுக்கும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் டீஸர், ட்ரெய்லர் லொட்டு லொசுக்கு என்று அரை டஜன் திருவிழாக்கள். உதயநிதியின் நண்பேன்டா படத்தில் ஹீரோயின் நயன்தாரா, காமெடிக்கு சந்தானம், இசைக்கு ஹாரிஸ் என்று எல்லாமே பெரிய டீம். ஃபர்ஸ்ட் லுக்கை பண்டிகை மாதிரி கொண்டாடுவதில் நியாயம் இருக்கிறது.
முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி தாண்டியதில் கால்வாசியைதான் இது கதிர்வேலன் காதலால் எட்டிப் பிடிக்க முடிந்தது. அந்த விட்டகுறை தொட்டகுறையை நண்பேன்டாவில் சரிசெய்ய நினைக்கிறார் உதயநிதி. சத்தமில்லாமல் தொடங்கிய படப்பிடிப்பு பாதியை கடந்திருப்பதாக கேள்வி. முதலிரு படங்களை இயக்கியவர்கள் அனுபவஸ்தர்கள் என்றால் நண்பேன்டாவை இயக்கி வருகிறவர் ஜெகதீஷ் என்ற அறிமுகம்.
 
பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்து வரும் நண்பேன்டாவின் ஃபர்ஸ்ட் லுக்கை ஏப்ரல் 18 வெளியிடுகின்றனர். இந்தப் படம் முதல் படத்தின் வெற்றியை ரிப்பீட் செய்யுமா என்பதே உதயநிதியின் எதிர்பார்ப்பு.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments