Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் தயாரிப்பில் எஸ்.ஆர்.பிரபாகரன்
, சனி, 17 மே 2014 (13:38 IST)
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் படங்களை இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் அடுத்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்காக இயக்குகிறார். படத்தில் நடிப்பவர்கள் குறித்த விவரம் இன்னும் முடிவாகவில்லை.
சுந்தரபாண்டியனின் வெற்றி பிரபாகரனுக்கு உடனடியாக, இது கதிர்வேலன் காதல் படத்தைப் பெற்றுத் தந்தது. உதயநிதி நடித்த இந்தப் படத்தை அவரின் ரெட்ஜெயண்ட் தயாரித்தது. படம் சுமாராகப் போனாலும் மீண்டும் ரெட்ஜெயண்டே பிரபாகரனுக்கு அடுத்தப்பட வாய்ப்பை வழங்கயிருப்பதாக இன்டஸ்ட்ரியில் பேசப்பட்டது. உதயநிதியும் அதனை ஒப்புக் கொண்டார். 
 
இந்நிலையில் தனது அடுத்தப் படத்தை எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதனுக்காக இயக்குவது என்று பிரபாகரன் முடிவு செய்துள்ளார். அதனை மதனும் உறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். படத்தில் நடிப்பவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil