Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எமியின் சம்பளத்தை உயத்திய ஷங்கர்

எமியின் சம்பளத்தை உயத்திய ஷங்கர்
, ஞாயிறு, 22 ஜூலை 2012 (11:00 IST)
PR
நடிகர்கள் அதிகம் சம்பளம் வாங்குகிறார்கள், பட்ஜெட்டே பத்த மாட்டேங்குது என்று புலம்புகிறவர்கள்தான் போட்டி போட்டு சம்பளத்தை உயர்த்துகிறார்கள். ஷங்க‌‌ரின் ஐ படத்தில் நடந்துள்ள வேடிக்கையை பாருங்கள்.

மதராசப்பட்டணத்தில் அறிமுகமான எமி ஜாக்ஸன் இதுவரை ஐம்பது லட்த்தை தொடவில்லை. லேட்டஸ்டாக நடிக்கும் தாண்டவத்திலும்கூட இவருக்கு சம்பளம் அரை கோடிக்கும் கீழேதான் இருக்கிறது. இந்நிலையில் ஐ படத்துக்கு 75 லட்சங்கள் சம்பளமாக எமிக்கு தந்திருப்பதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டிருக்கிறது. இது உண்மையாக இருக்குமென்றால் எமியை இனி 75 லட்சத்திற்கு குறைவாக பிடிக்க முடியாது.

ஆஸ்கர் பிலிம்ஸும், ஷங்கரும் சேர்ந்து செய்திருக்கும் இந்த வேலைக்கு என்ன ப‌ரிசு தரலாம்?

Share this Story:

Follow Webdunia tamil