Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

என் பெயரில் மோசடி - சிம்பு அறிக்கை

என் பெயரில் மோசடி - சிம்பு அறிக்கை
, ஞாயிறு, 9 பிப்ரவரி 2014 (12:42 IST)
FILE
டெக்னாலஜியுடன் சேர்ந்து மோசடிகளும் வளர்ந்து வருகிறது. நட்சத்திரங்களுக்கு இருக்கும் பெரிய தொந்தரவு அவர்கள் பெயரில் ட்விட்டர், ஃபேஸ்புக் கணக்கைத் தொடங்கி அவர்கள் போலவே கமெண்ட் போடுவதும், சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களை வில்லங்கத்தில் கோர்த்து விடுவதும்.

சமீபத்தில் பரோட்டா சூரியை ரஜினியுடன் இப்படி கோர்த்துவிட்டு சூரியை பேதியாக்கினார்கள்.

சிம்பு பெயரிலும் சிலர் இப்படி போலி அக்கவுண்ட் தொடங்கி கலாய்க்கிhர்கள். அதுபற்றி சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஐ ஆம் எஸ்டிஆர் என்ற பெயரில் ட்விட்டரில் தான் இருப்பதாகவும், சிலர் தனது பெயரில் போலி அக்கவுண்ட்கள் வைத்திருப்பதாகவும், ரசிகர்களும் பத்திரிகைகளும் போலியை பார்த்து ஏமாற வேண்டாம் எனவும் தனது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

போலி அக்கவுண்ட்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil