Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்ன கொடுமை இது நாராயணா...?

Webdunia
புதன், 28 மே 2014 (15:19 IST)
என்னுடைய ஒரே போட்டி, ஒரே டார்கெட் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் என்று வெளிப்படையாக சூளுரைத்து படம் நடிக்க ஆரம்பித்தவர் படாவதி ஸ்டார் சீனிவாசன். அதன் முதல்கட்டமாக தனது லத்திகா படத்தை ஒரு வருடம் காசு கொடுத்து ஓட வைத்தார். 
கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் மேனரிசம் என்ற பெயரில் இவர் செய்த முக சேஷ்டைகளுக்கு ஜனம் சிரித்து வைக்க நானுமொரு ஸ்டார் என்ற மிதப்பில் இருக்கிறார் படாவதி. இவர் அடுத்து செய்திருக்கும் காரியம்தான் ஜீரணிக்க கஷ்டமானது.
 

மகேந்திரனின் ஜானி படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருப்பார். திருடன் வேடத்தைவிட சிறப்பானது முடி திருத்துகிறவராக வரும் சோம்பேறி வேடம். அந்த சோடாபுட்டி கண்ணாடி முதற்கொண்டு அத்தனையையும் அப்படியே டிட்டோவாக காப்பியடித்து கிடாய் பூசாரி மகுடி படத்தில் நடிக்கிறார் சீனிவாசன். 
கிடாய் பூசாரி மகுடிக்கு இசை இளையராஜா. இளையராஜா இசையில் நானும் ஒரு பாடல் பாடியிருக்கேன் என்கிறார் படாவதி ஸ்டார். 
 
சூப்பர் ஸ்டார் பாடிட்டார் பவர் ஸ்டார் பாடினால் என்ன என்று இளையராஜா நினைத்திருப்பாரோ?
 
மகேந்திரனுக்கு இந்த கொடுமையை தாங்குகிற வல்லமையை கடவுள் அருளட்டும். 

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

Show comments