Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனக்கு போட்டி நஸ்ரியாதான்

எனக்கு போட்டி நஸ்ரியாதான்
, செவ்வாய், 24 டிசம்பர் 2013 (17:48 IST)
FILE
இப்படி பகிரங்கமாக சொல்பவர் வேறு யாருமில்லை நாயகி லட்சுமி மேனன்தான். தற்போது வந்திருக்கும் நடிகைகளில் என்னைப் போல குடும்பப் பாங்கான வேடத்துக்கு நஸ்ரியாவைத்தான் தேடிச் செல்கின்றனர். அது மட்டுமில்லாமல் நன்றாக என்னைப் போல் நடிக்கவும் செய்கிறார். அதனால்தான் எனக்கு அவர் போட்டி என்று சொன்னேன்.

தமிழ் ரசிகர்களைப் பொருத்த வரையில் நன்றாக நடித்தால் மனதார பாராட்டுவார்கள். நேருக்கு நேராக வாழ்த்தவும் செய்வார்கள். அதனால் தமிழ் ரசிகர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். இன்னும் சொல்லப் போனால் என் அம்மாவே கூட நான் நடித்த படங்களைப் பார்த்து விட்டு, நன்றாக இருந்தால் மட்டுமே பாராட்டுவார். இல்லையென்றால் கண்டு கொள்ளவேமாட்டார்.

உண்மையாக சொல்லவேண்டுமென்றால் மலையாள ரசிகர்களைக் காட்டிலும் எனக்கு உற்சாகம் தருவது தமிழ் ரசிகர்கள்தான். அவர்களை என்றைக்கும் மறக்க மாட்டேன் என்கிறார் புன்னகையுடன்.

Share this Story:

Follow Webdunia tamil