Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எடையை குறைத்தார்.... சிகையை வளர்த்தார்... எல்லாம் சினிமாவுக்காக

Webdunia
புதன், 11 ஜூன் 2014 (15:15 IST)
நடிகர் மாதவன் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட படத்துக்காக லாஸ் ஏஞ்சல்ஸில் கடந்த ஆறு மாதமாக பாக்ஸிங் பயிற்சி எடுத்து வந்ததைப் பற்றி ஏற்கனவே ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சியாக சில சுவாரஸிய தகவல்கள்.
சுதா கே. பிரசாத் இயக்கும் இறுதிச் சுற்று என்ற படத்தில் மாதவன் நடிக்கிறார். இந்தப் படத்தில் அவர் பாக்ஸிங் சொல்லித் தரும் கோச்சாக நடிப்பதாக கூறப்படுகிறது. கதைப்படி அவர் முன்னாள் பாக்ஸிங் வீரராம். இந்த வேடத்துக்காக ஆறு மாதங்கள் கடும் பயிற்சி செய்து உடல் எடையில் 15 கிலோ குறைத்துள்ளார். இப்போது மாதவனைப் பார்க்க பாக்ஸர் போலவே இருக்கிறார். மேலும் கதாபாத்திரத்துக்காக நீண்ட தலைமுடி வளர்த்து அடர்த்தியாக தாடியும் வைத்துள்ளார்.
 
பெண்கள் பாக்ஸிங் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் படத்தின் கதையை எழுதியிருக்கிறார் இயக்குனர் சுதா. மாதவன் இறுதிச் சுற்றில் விரும்பி நடிக்க இந்த விழிப்புணர்வு முயற்சியும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இறுதிச் சுற்றை ஒய் நாட் ஸ்டுடியோ தயாரிக்கிறது. 
 
ஜுலை 7-ம் தேதி முதல் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

Show comments