Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உத்தம வில்லன் செல்லவிருப்பது ஆஸ்ட்ரேலியா அல்ல துருக்கி

Webdunia
செவ்வாய், 29 ஏப்ரல் 2014 (12:51 IST)
உத்தம வில்லன் படக்குழு இன்னும் சில தினங்களில் துருக்கி செல்கிறது. அங்கு பாடல் காட்சியை படமாக்குகின்றனர்.
பெங்களூருவில் தொடங்கிய உத்தம வில்லன் படப்பிடிப்பு இடைவெளியில்லாம் நடந்து வருகிறது. செப்டம்பர் 10 ஆம் தேதி படத்தை வெளியிடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். தற்போது கமலின் மனோரஞ்சன் என்ற 21 ஆம் நூற்றாண்டு தமிழ் சினிமா நடிகர் வேடம் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இதையடுத்து எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த உத்தமன் என்ற நாடக கலைஞன் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்கின்றனர். 
 
அதற்குமுன் துருக்கி சென்று பாடல் காட்சியை படமாக்க உள்ளனர்.
 
முதலில் உத்தம வில்லன் குழு ஆஸ்ட்ரேலியா செல்வதாகதான் இருந்தனர். இப்போது பயணத் திட்டம் துருக்கிக்கு மாறியுள்ளது. இந்த பாடல் காட்சியில் கமலுடன் ஆண்ட்ரியா நடிக்க உள்ளார்.
 
உத்தம வில்லனை ரமேஷ் அரவிந்த் இயக்க, கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். இசை ஜிப்ரான். கமலும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து படத்தை தயாரிக்கிறார்கள்.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments