Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உதயநிதி ஸ்டாலினை இயக்கும் அகமது?

உதயநிதி ஸ்டாலினை இயக்கும் அகமது?
, திங்கள், 7 ஏப்ரல் 2014 (19:12 IST)
நண்பேன்டா படத்தில் நடித்து வரும் உதயநிதி, அப்படம் முடிவதற்குள் அடுத்தப் படத்தை தீர்மானிப்பதில் ஆர்வமாக உள்ளார். மூன்று பேர்களிடம் அவர் கதை கேட்டுள்ளார்.
 
இது கதிர்வேலன் காதல் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் மேலும் ஒரு படம் தயாரிக்கிறார் உதயநிதி. ஆனால் இந்தப் படத்தில் உதயநிதி ஹீரோ கிடையாது, வேறு ஒருவர்.
 
என்றென்றும் புன்னகை அகமது உதயநிதியிடம் ஒரு கதை கூறியுள்ளார். இந்தக் கதை உதயநிதிக்கு பிடித்திருப்பதாகவும், அவரது அடுத்தப் படமாக அது இருக்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
 
உதயநிதியின் ரெட் ஜெயண்ட் வாங்கி வெளியிட்டிருக்கும் நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவுக்கும் உதயநிதி அட்வான்ஸ் தந்துள்ளார். கிருஷ்ணாவின் அடுத்தப் படம் ரெட்ஜெயண்ட் தயாரிப்பாக இருக்கும். ஆனால் ஹீரோ உதயநிதிதானா என்பது இன்னும் அவிழாத ரகசியம்.
 
இன்றைய தேதியில் நண்பேன்டாவுக்குப் பிறகு உதயநிதி அகமது இயக்கத்தில் நடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil