Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உடல் உறுப்புகள் தானம் - த்ரிஷாவை தொடரும் சோனா

உடல் உறுப்புகள் தானம் - த்ரிஷாவை தொடரும் சோனா
, புதன், 28 மே 2014 (13:28 IST)
தெரு நாய்களின் நலனில் அக்கறை செலுத்தி வந்த நடிகை த்ரிஷா இன்னொரு நல்ல கா‌ரியத்தையும் சத்தமில்லாமல் செய்துள்ளார். தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்வதாக பிரமாணப் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
இறந்து போகிறவர்களின் உடல் உறுப்புகள் உயிரோடு இருப்பவர்கள் பலரின் உயிரை காப்பாற்றக் கூடியவை. நமது நாட்டில் பார்வையற்றவர்கள் லட்சக்கணக்கில் உள்ளனர். விழித்திரை தானம் செய்வதன் மூலம் இவர்களில் க‌ணிசமானவருக்கு பார்வை கிடைக்க வழி செய்ய முடியும். கண் பார்வையைப் போலவே உடல் தானமும் முக்கியமானது.
 

கமல்ஹாசன் ஏற்கனவே தனது உடலை தானம் செய்வதாக முறைப்படி எழுதிக் கொடுத்துள்ளார். தற்போது நடிகை த்ரிஷாவும் தனது உடல் உறுப்புகள் அனைத்தையும் தானம் செய்துள்ளார். இந்த நல்ல விஷயத்தை தனது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia
இந்நிலையில் ஜுன் 1 தனது பிறந்தநாள் அன்று தனது உடல் உறுப்புகளை தானம் செய்யப் போவதாக நடிகை சோனா அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil