Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோப்பில் யான் படத்தின் காஸ்ட்யூம் திருவிழா

Webdunia
திங்கள், 21 ஜூலை 2014 (14:57 IST)
பிரபல கேமராமேன் ரவி.கே.சந்திரன் இயக்கும் முதல் படம் யான். ஜீவா, துளசி நாயர் நடித்து வரும் இந்தப் படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மெண்ட் தயாரிக்கிறது. ஒருநாள் பேட்ச் வொர்க் மற்றும் இரு பாடல்கள் மட்டுமே இனி எடுக்கப்பட உள்ளன.
யான் படத்தின் முதல் பாதி கதை மும்பையில் நடக்கிறது. அதனால் அடுத்த மாதத்தில் ஒருநாள் மும்பையில் பேட்ச்வொர்க் நடத்த உள்ளனர். அதையடுத்து ப்ரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்த் உள்ளிட்ட நாடுகளில் இரு பாடல் காட்சிகளை படமாக்குகின்றனர்.
 
ஒரு பாடல் காட்சியில் ஜீவாவும், துளசி நாயரும் தலா ஐம்பது உடைகள் மாற்றுகின்றனர். இந்தப் பாடலின் ஹைலைட்டே இவர்களின் உடை மாற்றம்தானாம். நான்கு விநாடிகளுக்கொருமுறை இருவரும் உடை மாற்றுகின்றனர். வெளிநாட்டுப் பயணத்தைவிட இவர்களின் காஸ்ட்யூம்களுக்குதான் அதிக செலவு பிடிக்கும்.
 
யானுக்கு ஹாரிஸ் இசையமைக்க வாலி, நா.முத்துக்குமார், கபிலன் பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவு மனுஷ் நந்தன். பிருந்தா நடனம் அமைத்துள்ளார். நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர்.
 
ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகியுள்ளது.

ஆஸ்கர் நூலத்தில் இடம்பெறுகிறது ஹரிஷ் கல்யாண் திரைப்படம்.. நெகிழ்ச்சியான பதிவு..!

“என் வழியில் நான் உறுதியா நிற்க எம்ஜிஆர் - சிவாஜிக்கு கிடைத்த ரிசல்ட் தான் காரணம்” ; ‘சாமானியன்’ ராமராஜன்!

புதிய கதாபாத்திரங்களில் நடிக்க புதியவர்களோடு பணியாற்ற விரும்புகிறேன்-பாகுபலி சீரிஸில் பின்னணி குரல் கொடுத்த சரத் கெல்கர்!

‘கல்கி 2898 AD’ படத்திலிருந்து பிரபாஸின் சிறந்த நண்பன் மற்றும் எதிர்கால வாகனமான ‘புஜ்ஜி’ அறிமுகப்படுத்தப்பட்டது!

என்னய்யா இதெல்லாம் எடுத்து வெச்சிருக்கீங்க.. வாழ்க்கை வரலாற்று படத்தில் ரேப் சீன்! – அதிர்ச்சியடைந்த டொனால்ட் ட்ரம்ப்!

Show comments