அறியாப் பருவத்தில் வருவதெல்லாம் காதலே இல்லை. அது வெறும் உடல் கவர்ச்சிதான். பக்குவமான வயதில் தனக்கு ஒரு பையனையோ, பெண்ணையோ பிடித்திருந்து, அந்த ஆணோ, பெண்ணோ தனக்கு வாழ்க்கைக்கு ஏற்றவர்கள் இவர்தான், என்று உணர்ந்து அதன் பின் காதலிப்பதுதான் உண்மையான காதலாக இருக்க முடியும்.
அதுதான் வாழ்க்கையில் நீண்ட தூரம் பயணமாகும். என்ற ஆழமான கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்படும் படம்தான் ‘அபியின் ரோஸ்’ விரைவில் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர். ஹீரோ ஹீரோயின் இருவருமே புது முகங்கள். இப் படத்திற்கு ஒளிப்பதிவு: வில்லியம்ஸ், இசையமைப்பாளர்: காஜூ, இயக்கம்: எம்.எஸ்.மகா. ஜான், ஆல்பட், ஒயிட் ஆகிய மூவரும் இணைந்து தயாரிக்கின்றனர். தமிழ்நாடு, கேரளா, பதுச்சேரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டிருக்கின்றனர்.