இரு மொழிகளில் அர்ஜுன் தாஸ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படம்!

Webdunia
செவ்வாய், 21 மார்ச் 2023 (08:43 IST)
கைதி படத்தின் மூலம் மக்கள் மனதில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதன் பிறகு இவர் நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீஸான விக்ரம் படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது வசந்தபாலன் இயக்கும் ‘அநீதி’ படத்தில் கதாநாயகனாகவும் நடித்து முடித்துள்ளார்.

அதே போல அர்ஜுன் தாஸ் பாலிவுட்டில் ரீமேக் ஆகவுள்ள மலையாள ஹிட் படமான ‘அங்கமாலி டைரீஸ்’ ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்த படத்தை இயக்குனர் மதுமிதா இயக்க உள்ளார்.

இந்நிலையில் இப்போது டேவிட் மற்றும் சோலோ ஆகிய படங்களின் இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கத்தில் ஒரு கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் இந்தியில் உருவாக உள்ள நிலையில் காளிதாஸ் ஜெயராமும் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments