Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டரை மணி நேரமாக குறைக்கப்பட்ட அஞ்சான்

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (12:37 IST)
அஞ்சான் படம் 2.50 மணி நேரம் ஓடுகிறது. படத்தை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து எட்டு நிமிடங்கள் எடிட் செய்வதாக முதலில் தெரிவித்தனர். தற்போது இருபது நிமிடங்களாக அது அதிகரித்துள்ளது.
திரைக்கதை என்ற வஸ்து இல்லாமல் எடுக்கப்பட்ட அஞ்சானை இணையத்திலும், பத்திரிகைகளிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். படத்தின் ஓபனிங் சரித்திர சாதனை என்று தயாரிப்பு தரப்பு சொன்னாலும் படம் ரசிகர்களால் நான்காவது நாளே புறந்தள்ளப்படுமோ என்ற அச்சம் அவர்களுக்கு உள்ளது.
 
திரைக்கு வந்த படத்தில் அதிகபட்சம் செய்யக்கூடியது மிக மோசமான காட்சிகளை எடிட் செய்வது மட்டும்தான். இடைவேளைக்கு முன்பு படம் 88 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் ஒன்பது நிமிடங்களை எடிட் செய்துள்ளனர். இடைவேளைக்குப் பிறகு 82 நிமிடங்கள் ஓடும் படம் 71 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக இருபது நிமிடங்கள். 2.50 நிமிடங்கள் இருந்த படம் 2.30 நிமிடங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
 
எடிட் செய்யப்பட்ட அஞ்சான் வார நாட்களில் ரசிகர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
 

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

Show comments