Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இன்று பண்ணையாரும் பத்மினியும் ஆடியோ ரிலீஸ்

இன்று பண்ணையாரும் பத்மினியும் ஆடியோ ரிலீஸ்
, வெள்ளி, 22 நவம்பர் 2013 (10:20 IST)
விஜய் சேதுபதியின் அடுத்த படமான பண்ணையாரும் பத்மினியும் படத்தின் ஆடியோ இன்று சத்யம் சினிமாஸில் வெளியிடப்படுகிறது.
FILE


பத்மினி என்றதும் ஏதோ பெண் என்று நினைத்துவிட வேண்டாம். இது பத்மினி ப்ரீமியர் கார். தனது கார் மீது அளவுகடந்த பாசம் வைத்திருக்கும் ஒரு பண்ணையாரையும் அவரை சுற்றியுள்ளவர்களையும் பற்றிய கதையிது.

நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த அருண் குமார் படத்தை இயக்கியிருக்கிறார். பண்ணையாராக ஜெயப்பிரகாஷும், அவரின் கார் டிரைவராக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதியின் காதலியாக ஐஸ்வர்யா.

படத்தின் முக்கிய அம்சம் சினேகா. ஜெயப்பிரகாஷின் மகளாக சில காட்சிகளில் கௌரவ வேடம் ஏற்றிருக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஒரு பாடலை மட்டும் வெளியிட்டவர்கள் இன்று மொத்தப் பாடல்களையும் வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil