Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி, தெலுங்கில் ரீமேக்காகும் சதுரங்க வேட்டை

Webdunia
வெள்ளி, 11 ஜூலை 2014 (11:47 IST)
முன்னணி நடிகர், இயக்குனர் இல்லாத ஒரு படம் மீடியா மற்றும் பிரபலங்களின் கவனத்தை கவர்வது அவ்வளவு எளிதல்ல. சமீபத்தில் அப்படியொரு கவனத்தை பெற்ற படம் மனோபாலாவின் சதுரங்க வேட்டை.
சதுரங்க வேட்டை பிரபல ஒளிப்பதிவாளர் நட்டு என்கிற நட்ராஜ் நடித்திருக்கும் ஆக்ஷன் த்ரில்லர். வினோத் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். இயற்கையின் இன்பாலன்ஸ் சுனாமி மாதிரி இயற்கை பேரழிவாக வெளிப்படுவது போல் சாதாரண மனிதனின் மனசாட்சி வாழ்க்கையில் ஏற்படுத்தும் இன்பாலன்ஸை குறித்து இப்படம் பேசுகிறது. பணம்தான் எல்லாம், அதை வைத்து எதையும் சாதிக்க முடியும் என்ற மனிதனின் குணம் இதில் பிரதானமாகப் பேசப்படுகிறது.
 
நடிகர் மனோபாலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை, ஜெயிக்கிற குதிரையில் மட்டுமே பந்தயம் கட்டும் திருப்பதி பிரதர்ஸ் வாங்கியதைத் தொடர்ந்து சதுரங்க வேட்டை வெளிச்சத்துக்கு வந்தது. படத்தின் ட்ரெய்லரைப் பார்த்த ரசிகர்கள் படத்தைப் பார்க்கும் ஆர்வம் கொண்டனர். ரஜினிகாந்த் தொலைபேசியில் மனோபாலாவை அழைத்து ட்ரெய்லர் தனக்குப் பிடித்திருந்ததாக பாராட்டு தெரிவித்தார்.
 
சதுரங்க வேட்டை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக திருப்பதி பிரதர்ஸ் தெரிவித்துள்ளது. தெலுங்கில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடிப்பார் எனவும் கூறப்படுகிறது. இந்தியில் அஜய்தேவ் கான் அல்லது அக்ஷய் குமார். திருப்பதி பிரதர்ஸே இந்தி ரீமேக்கை தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.
 
இந்த இடத்தில் இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். ஒரு படம் வெளியாகும் போது அப்படத்தை உயர்த்திக் காட்ட, இந்தி தெலுங்கில் படத்தை ரீமேக் செய்யப் போகிறார்கள் என பில்டப் தரப்படுவது சாதாரணம். வேட்டை படத்தின் போதும் இதே யுக்தியை திருப்பதி பிரதர்ஸ் கடைபிடித்தது. வேட்டையின் இந்தி ரீமேக்கை லிங்குசாமி இயக்குகிறார், நடிகர்கள் தயாரிப்பாளர் எல்லாம் தயார், படத்தை தயாரித்த யுடிவி க்கு படம் மிகவும் பிடித்திருக்கிறது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் நடந்தது என்ன....? 
 
வேட்டை மாதிரி ஒரு கண் துடைப்பு பில்டப்பாக சதுரங்க வேட்டையின் தெலுங்கு, இந்தி ரீமேக் குறித்த அறிவிப்பு இருக்காது என்று நம்புவோம். நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திருப்பதி பிரதர்ஸினுடையது.
 

’ராயன்’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த தனுஷ்.. ரிலீஸ் தேதியில் மாற்றமா?

'காதலிக்க நேரமில்லை’ படப்பிடிப்பு நிறைவு.. கேக் வெட்டி கொண்டாடிய கிருத்திகா உதயநிதி..!

இந்த வயசுலேயே இப்படி ஒரு வியாதியா? ஃபகத் பாசிலுக்கு அரியவகை பாதிப்பு? – ரசிகர்கள் அதிர்ச்சி!

என் மனைவி சொன்ன கதையே "புஜ்ஜி அட் அனுப்பட்டி"- இயக்குநர் ராம் கந்தசாமி!

ஸ்டைலான உடையில் ஸ்டன்னிங்கான போஸ் கொடுத்த ஆண்ட்ரியா!

Show comments