Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திப் பாடலாசிரியர் குல்சாருக்கு தாதாசாகேப் பால்கே விருது

இந்திப் பாடலாசிரியர் குல்சாருக்கு தாதாசாகேப் பால்கே விருது
, ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (12:27 IST)
2013ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு பாடலாசிரியர் குல்சார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
குல்சாரை பாடலாசிரியர் என்ற வரையறைக்குள் அடக்குவது சரியாகாது. குல்சார் கவிஞர், திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, இயக்குனர் என பன்முக திறமை வாய்ந்தவர். தான் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் சிறந்த பங்களிப்பை செலுத்தியவர்.
 
குல்சாரின் இயற்பெயர் சம்பூரண்சிங் கல்ரா. 1934ஆம் ஆண்டு பிறந்தார். 1956ஆம் ஆண்டு பாடலாசிரியராக திரைத்துறையில் நுழைந்தார். அன்றிலிருந்து இன்றுவரை யாரும் அசைக்க முடியாத உயரத்தில் குல்சார் அமர்ந்துள்ளார்.
 
ஆர்.டி.பர்மன், சலீல் சௌத்ரி, ஏ.ஆர்.ரஹ்மான் என்று அன்றிலிருந்து இன்றுவரை இந்தியாவின் முக்கிய இசையமைப்பாளர்கள் பலருடன் பணிபுரிந்துள்ளார். பத்மபூஷண், சாகித்ய அகாதமி உள்பட ஏராளமான விருதுகளையும் வாங்கியுள்ளார்.
 
ஏழு பேர் கொண்ட நடுவர் குழு 2013ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதுக்கு குல்சாரை தேர்வு செய்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil