Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இது கதிர்வேலனின் காதல் யுஎஸ்ஏ, யுகே, ஆஸ்ட்ரேலியா வசூல்

இது கதிர்வேலனின் காதல் யுஎஸ்ஏ, யுகே, ஆஸ்ட்ரேலியா வசூல்
, சனி, 22 பிப்ரவரி 2014 (10:21 IST)
இது கதிர்வேலனின் காதல் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. சில இடங்களில் மட்டுமே படம் லாபம் சம்பாதித்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பு கூறுகிறது.
FILE

அமெரிக்காவில் படம் நல்ல ஓபனிங்பை பெற்றுள்ளது. 14 ஆம் தேதி வெளியான படம் முதல் 3 தினங்களில் வடஅமெரிக்காவில் 16 திரையிடல்களில் 27,478 டாலர்களை வசூலித்தது. நமது ரூபாயில் 16.99 லட்சங்கள்.

யுகே மற்றும் அயர்லாந்தில் இப்படம் அதே மூன்று தினங்களில் 12,460 பவுண்ட்களை வசூலித்தது. எட்டு திரையிடல்களில் இந்த வசூலை அது பெற்றது. நமது ரூபாய் மதிப்பில் சுமாராக 12.89 லட்சங்கள்.
webdunia
FILE

ஆஸ்ட்ரேலியாவில் இப்படம் ஆறு திரையிடல்களில் 16,519 ஆஸ்ட்ரேலிய டாலர்களை வசூலித்தது. ரூபாயில் 9.23 லட்சங்கள்.

மலேசியாவில் 13 திரையிடல்களில் 13.55 லட்சங்களை வசூலித்துள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil