Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இங்கு காதல் கற்றுத்தரப்படும்

இங்கு காதல் கற்றுத்தரப்படும்
, புதன், 26 டிசம்பர் 2012 (19:52 IST)
காதலில் சொதப்புவது எப்படி என்று நடிகர் சித்தார்த் படம் எடுத்தால், ‘இங்கு காதல் கற்றுத்தரப்படும்’ என ஸ்ரீநாத் கிரியேஷன்ஸ் படம் எடுத்து வருகிறார்கள்.

இந்தக்கால இளைஞி இளைஞர்கள் காதலை எப்படி அணுக வேண்டும். அதை எப்படி கையாள வேண்டுமென வகுப்பெடுக்கும் அளவுக்கு காதலைக் கற்றுத்தரப் போகிறதாம் இந்த படம். அத்தோடு காதல் தோல்வியால் உயிர் விடும் ஜோடிகள் உலகத்தை தைரியமுடன் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை மையக் கருத்தாக கொண்டுள்ளதாம்.

இப்படத்தில் புதுமுக நாயகனாக ஸ்ரீநாத் அறிமுகமாகிறார். நாயகியாக அறிமுகமாகிறார் தருஷனா மற்றும் பாண்டு, லிவிங்ஸ்டன், ஆர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஸ்ரீதரன்.

Share this Story:

Follow Webdunia tamil