Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆள் படத்துக்கு வெளிநாட்டில் தடை

ஆள் படத்துக்கு வெளிநாட்டில் தடை
, சனி, 20 செப்டம்பர் 2014 (17:38 IST)
விதார்த் நடித்துள்ள ஆள் படத்தை வெளியிட மலேசியா தணிக்கைத்துறை தடை விதித்துள்ளது.
இந்தியில் வெளியான அமீர் படத்தின் தழுவல்தான் ஆள். விதார்த் நடித்துள்ள இப்படம் மத பின்னணி கொண்டது. வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் விதார்த்தை ஒரு மதவாத கும்பல் மிரட்டி சில தவறான காரியங்களை செய்யச் சொல்கிறது. தாயும், தங்கையும் தீவிரவாதிகளின் கஸ்டடியில் இருப்பதால் சொல்வதை செய்ய வேண்டிய நிலை விதார்த்துக்கு. அவர் அந்த நெருக்கடியிலிருந்து தப்பித்தாரா இல்லையா என்பதுதான் படம்.
 
இந்தியாவில் படத்தை வெளியிட எந்தத் தடையும் இல்லை. அதேநேரம் மலேசியாவில் படத்தை வெளியிட மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. தடையை எதிர்த்து போராடுவேன் என்று கோடம்பாக்கத்தில் இருந்தபடி கோலாலம்பூருக்கு சவால்விட்டுக் கொண்டிருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர்.
 

Share this Story:

Follow Webdunia tamil