Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக.22 த்ரிஷாவின் முதல் ரிலீஸ்

ஆக.22 த்ரிஷாவின் முதல் ரிலீஸ்
, திங்கள், 11 ஆகஸ்ட் 2014 (11:19 IST)
கன்னடத்தில் த்ரிஷா நடித்த பவர் படம் வரும் 22 -ம் தேதி வெளியாகிறது.
 
தமிழ், தெலுங்கில் பதினைந்து வருடங்களாக நடித்து வந்தாலும் த்ரிஷா இதுவரை கன்னடத்தில் நடித்ததில்லை. பலமுறை பலர் முயன்றும் கன்னடத்துக்கு காது கொடுக்காதவர் கடைசியில் புனித் ராஜ்குமாரின் பவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்தப் படத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வது போல் காட்சி உள்ளது. இந்தப் புகைப்படங்களை வைத்து ஒரு கும்பல், த்ரிஷா திடீர் திருமணம் செய்தார் என்று இணையத்தில் புரளி கிளப்பியது.
 
த்ரிஷாவின் முதல் கன்னடப் படம் பவர் ஆகஸ்ட் 22 -ம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 29 அவர் நடித்த தமிழ்ப் படம் பூலோகமும் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil