Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அருள்நிதி - அண்ணன் தயா‌ரிப்பில் தம்பி

அருள்நிதி - அண்ணன் தயா‌ரிப்பில் தம்பி
, புதன், 4 ஏப்ரல் 2012 (14:33 IST)
FILE
அரசியலில் அடித்துக் கொண்டாலும் சினிமாவில் வா‌ரிசுகள் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அருள்நிதிக்கு வம்சம் படத்தின் கதையை பற்றி‌ச் சொன்னவர் உதயநிதி. இப்போது துரை தயாநிதியின் கிளவுட் நைன் அருள்நிதி நடிக்கும் படமொன்றை தயா‌ரிக்கிறது.

மௌனகுருவுக்குப் பிறகு படங்களை ஆராய்ந்து அறிந்துதான் தேர்வு செய்கிறார் அருள்நிதி. கரு.பழனியப்பன் இயக்கும் அசோகமித்திரனில் நடிக்கயிருப்பவர் அடுத்து கிளவுட் நைனுக்கு கால்ஷீட் தந்திருக்கிறார்.

கணேஷ் என்ற அறிமுக இயக்குனர் இந்தப் படத்தை இயக்குகிறார். இதுவரை இயக்குனர், தயா‌ரிப்பாளர் இருவர் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளனர். தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil