Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரண்மனையை வெளியிடும் ராம.நாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்

அரண்மனையை வெளியிடும் ராம.நாராயணனின் தேனாண்டாள் ஃபிலிம்ஸ்
, வியாழன், 11 செப்டம்பர் 2014 (16:19 IST)
எந்தப் படம் வசூல் செய்யும் என்பதை சரியாக கணித்து அதனை வெளியிடுகிறவர் ராம.நாராயணன். அவரது தேனாண்டாள் ஃபிலிம்ஸ்தான் அனுஷ்காவின் அருந்ததியை தமிழில் வெளியிட்டு பெரும் லாபம் சம்பாதித்தது. மனிதர்கள் மீதுள்ள அவரது நம்பிக்கையை விட ஆவி, பேய்களின் மீதான அவரது நம்பிக்கை இரட்டை பலம் வாய்ந்தது.
சமீபத்தில் ராம.நாராயணன் மரணமடைந்தார். என்றாலும் அவரது மகன் அப்பாவின் வேலையை தொடர்கிறார். சுந்தர். சி இயக்கியிருக்கும் அரண்மனை படத்தின் விநியோக உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது. 
 
வினய், ஹன்சிகா, சுந்தர். சி, கோவை சரளா, லட்சுமி ராய், ஆண்ட்ரியா, நிதின் சத்யா, சந்தானம் உள்பட ஏராளமானோர் நடித்துள்ள இந்த ஹாரர் காமெடி படத்தை விஷன் ஐ மீடியாஸ் தயாரித்திருந்தது. தற்போது இதன் தமிழக திரையரங்கு விநியோக உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் வாங்கியுள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil