Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமீரை முந்திய அவதார்

அமீரை முந்திய அவதார்
, புதன், 13 ஜனவரி 2010 (19:27 IST)
ேம்ஸ் கேமரூனின் அவதார் உலகம் முழுவதும் வசூலை வா‌ி குவித்து வருகிறது. உலக அளவிலான பாக்ஸ் ஆஃபிஸில் டைட்டானிக்குக்கு அடுத்த இடத்தை அவதார் பிடித்துள்ளது. விரைவில் டைட்டானிக்கின் வசூலை அவதார் முந்தும் என கணித்திருக்கிறார்கள் விமர்சகர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை வெளியான ஹாலிவுட் படங்களின் வசூல் சாதனைகளை அவதார் முறியடித்துள்ளது. இதில் டைட்டானிக்கும் அடக்கம். இதுவரை 83 கோடிகளை இப்படம் வசூல் செய்துள்ளது. ஆச்ச‌ரியம் என்னவென்றால் சில இடங்களில் அவதார் அமீர்கானின் 3 இடியட்ஸ் படத்தையே பின்னுக்கு தள்ளியுள்ளது.

இந்திப் படவுலகில் 3 இடியட்ஸ் உருவாக்கி வரும் சாதனை மிகப் பெ‌ரியது. யுகே, யுஎஸ், மற்றும் ஆஸ்திரேலியாவில் மட்டும் இதுவரை 33 கோடிகளுக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளது.

சாதனை மேல் சாதனை படைத்துவரும் 3 இடியட்ஸின் வசூலை இந்தியாவில் முந்தியிருப்பதன் மூலம் இந்திப் படவுலகுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது அவதார்.

Share this Story:

Follow Webdunia tamil