Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமிதாப்பச்சனின் மனைவியாக நடிக்கும் சரிகா

அமிதாப்பச்சனின் மனைவியாக நடிக்கும் சரிகா
, திங்கள், 21 ஏப்ரல் 2014 (19:56 IST)
அமிதாப்பச்சனின் முதல் மனைவியாக தொலைக்காட்சி தொடர் ஒன்றில் நடிக்கயிருக்கிறார் நடிகை சரிகா.
 
கமல்ஹாசனுடனான பிரிவுக்குப் பிறகு சரிகா மும்பையில் செட்டிலானார். அவ்வப்போது படங்களில் நடித்து வருகிறவர் 2005 ல் பர்சானியா படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றார். நல்ல படம், வலுவான கதாபாத்திரம் இந்த இரண்டும் இருந்தால் மட்டுமே சினிமாவில் நடிக்க சரிகா ஒப்புக் கொள்கிறார்.
 
இயக்குனர் அனுராக் காஷ்யப் விரைவில் அமிதாப்பச்சன் நடிக்கும் தொலைக்காட்சி தொடர் ஒன்றை இயக்குகிறார். நெடுந்தொடர் கிடையாது, 35 அல்லது 36 எபிசோடுகள் மட்டுமே வரக்கூடிய மினி தொடர் என கூறப்படுகிறது. அமிதாப்பச்சன் அதில் பணக்கார பில்டராக வருகிறார். அவர்தான் தொடரின் நாயகன். கதைப்படி அவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவியாக நடிக்க சரிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இரண்டாவது மனைவியாக நடிப்பது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil