Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அனிருத் இசையில் விஜய் பாடினார்

Webdunia
செவ்வாய், 2 செப்டம்பர் 2014 (18:46 IST)
முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் கத்தி படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடல் பாடியுள்ளார் விஜய்.
தான் நடிக்கும் படங்களில் விஜய் பாடுவது ஒன்றும் புதிதில்லை. ஆனால் சமீபமாக அப்படி பாடுவதை நிறுத்திக் கொண்டார். முருகதாஸின் முந்தையப் படமான துப்பாக்கியில்தான் மீண்டும் பாட ஆரம்பித்தார். 
 
ஹாரிஸ் இசையில் ஆண்ட்ரியாவுடன் இணைந்து அவர் பாடிய கூகுள் கூகுள்... பாடல் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது. அதனைத் தொடர்ந்து தலைவாவில் ஜீ.வி.பிரகாஷ் இசையில் வாங்கண்ணா... வணக்கங்கண்ணா... பாடலை பாடினார். ஜில்லாவில் கண்டாங்கி... கண்டாங்கி... என்ற பாடல்.
 
கத்தி படத்தில் விஜய்யை பாட வைப்பதில் அனிருத் தீவிரமாக இருந்தார். தற்போது அவரது இசையில் செல்பி புள்ள என்ற பாடலை விஜய் பாடியுள்ளார்.
 
தீபாவளிக்கு படம் திரைக்கு வருகிறது.
 
 
 

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

Show comments