Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அதர்வாவின் இரும்பு குதிரை ரிலீஸ் தேதி அறிவிப்பு

அதர்வாவின் இரும்பு குதிரை ரிலீஸ் தேதி அறிவிப்பு
, வெள்ளி, 25 ஜூலை 2014 (19:54 IST)
பரதேசி படத்துக்குப் பிறகு பலரிடம் கதை கேட்டு ஆய்ந்து தெ‌ளிந்து அதர்வா கையெழுத்திட்ட படம் இரும்பு குதிரை. பரதேசி அதர்வா எவ்வளவு பக்குவப்பட்டுள்ளார் என்பதை இரும்பு குதிரையைப் பார்த்துதான் தெரிந்து கொள்ள முடியும். அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இரும்பு குதிரையை ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரித்துள்ளது. யுவராஜ் போஸ் என்பவர் படத்தை இயக்கியுள்ளார். அதர்வாவுடன் நடித்திருப்பது ப்ரியா ஆனந்த். முக்கியமான வேடத்தில் ராய் லட்சுமி.
 
பைக் ரேஸை மையப்படுத்தி தமிழில் வரும் முதல் படம் இது. அதர்வா பைக் ரேஸராக நடித்துள்ளார். ராய் லட்சுமியும் படத்தில் ரேஸ் வீராங்கனையாக வருகிறார். பல்வேறு விதமான பவர் பைக்குகளையும் ஓட்டியிருக்கிறார். இந்த கதாபாத்திரத்துக்காக அவர் உடல் எடையையும் குறைத்துக் கொண்டார்.
 
ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இரும்பு குதிரையின் பாடல்கள் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது. ஆகஸ்ட் 29ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர். அதர்வாவின் மார்க்கெட்டை நிர்ணயிக்கப் போகும் படம் என்பதால் இரும்பு குதிரையின் வெளியீட்டு தேதியை அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil