Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத் படத்தில் வில்லியாக தன்ஷிகா...?

Webdunia
செவ்வாய், 22 ஏப்ரல் 2014 (11:27 IST)
அஜீத் - கௌதம் படத்தில் யார் நடிக்கிறார்கள் என்ற சர்ச்சை வில்லன்களிடமிருந்து இப்போது வில்லிக்கு மாறியிருக்கிறது. 

ஏ.எம்.ரத்னத்தின் ஸ்ரீசத்ய சாய் தயாரிக்கும் இப்படத்துக்கு ஹாரிஸ் இசையமைக்க, அஜீத், அனுஷ்கா நடிக்கின்றனர். வில்லன்களாக அரவிந்தசாமி, அருண் விஜய் நடிப்பதாக தகவல் வெளியாகி அரவிந்த்சாமி அதனை நான்சென்ஸ் என்று மறுத்தார். அதேநேரம் அருண் விஜய் படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். அவருடன் ஆதியும் நடிக்க உள்ளார். இவர்கள் இருவரும் அஜீத்தின் எதிர்தரப்பாக இருப்பார்கள் என தெரிகிறது.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் அனுஷ்கா தவிர்த்து மேலுமொரு நாயகி வேடம் உள்ளது என கூறப்பட்டது. இந்த வேடத்துக்கு எமி, த்ரிஷா இருவரும் பரிசீலிக்கப்பட்டனர். ஆனால் இருவருமே நடிக்கவில்லை. குறிப்பிட்ட வேடம் வில்லத்தனம் நிரம்பியது, அதனால்தான் இருவரும் நடிக்க மறுத்தனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
தற்போது தன்ஷிகாவை அதில் நடிக்க வைக்க கௌதம் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தன்ஷிகாவின் உயரமான தோற்றம் அந்த வேடத்துக்கு கச்சிதமாக இருக்கும் என நினைக்கிறாராம் கௌதம்.
 
ஆனால் இதுவரை தன்ஷிகாவோ, தயாரிப்பு தரப்போ இந்த செய்தியை உறுதி செய்யவில்லை.
 

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

Show comments