Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜீத் ஜோடி அனுஷ்கா - உறுதி செய்த விஜய்

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2014 (12:52 IST)
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். இந்தத் தகவலை உறுதி செய்தார் இயக்குனர் விஜய்.
 
அஜீத் - கௌதம் பட ஹீரோயின் யார் என்பதை இயக்குனர் விஜய் ஏன் அறிவிக்க வேண்டும்?
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கயிருக்கும் படத்தில் அவருக்கு இரண்டு ஜோடிகள். ஒருவர் அனுஷ்கா இன்னொருவர் எமி ஜாக்சன் என கூறப்பட்டது. தற்போது எமிக்கு பதில் த்ரிஷாவின் பெயர் அடிபடுகிறது. 
 
இந்தத் தகவல்களை இதுவரை யாரும் உறுதி செய்யவில்லை. மேலும் படத்தின் ஹீரோயின் ஸ்டைலிஷாக இருக்க வேண்டும், அதனால் அனுஷ்காவுக்குப் பதில் மும்பை நடிகை ஒருவரைதான் கௌதம் தேர்வு செய்ய உள்ளார் எனவும் தகவல்கள் வெளியாயின. 
 
அதனால் அஜீத் படத்தில் யார் ஹீரோயின் என்பது குழப்பமாகவே இருந்தது. 
இந்நிலையில் விஜய்யின் சைவம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கௌதம், அனுஷ்கா இருவரும் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய விஜய், அடுத்து அஜீத் படத்தில் நடிக்கயிருப்பதற்காக அனுஷ்காவுக்கு வாழ்த்துகள் கூறினார். இதன் மூலம் கௌதம் படத்தில் அனுஷ்கா நடிக்கிறாரா இல்லையா என்ற சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
 
கௌதம் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் சந்தேகமில்லாமல் அனுஷ்கா நடிக்க உள்ளார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments