Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஜீத்தின் வில்லன் அரவிந்த்சாமி...?

அஜீத்தின் வில்லன் அரவிந்த்சாமி...?
, புதன், 2 ஏப்ரல் 2014 (16:28 IST)
அஜீத் - கௌதம் இணையும் படம் குறித்து நாளொரு வதந்தியும் பொழுதொரு தகவலும் பொழிந்தபடியே உள்ளது. சமீபத்திய ஹாட் நியூஸ், படத்தில் அரவிந்த்சாமியும், அருண் விஜய்யும் வில்லனாக நடிக்கிறார்கள்.
அஜீத்தின் 55 வது படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் என்பதும், பிரபல இந்தி திரைக்கதையாசிரியர் (பிறப்பால் இவர் தமிழர்) ஸ்ரீதர் ராகவன் திரைக்கதை அமைக்கிறார் என்பதும் மட்டுமே இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார், ஹாரிஸ் ஜெயராஜ் இசை என்பதும் ஏறக்குறைய உறுதி ஆகியிருக்கிறது. கௌதம் நடிக்கிறார் என வெளியான செய்தியை கௌதமே மறுத்தார். படத்துக்கு டான் மெக்கார்தர் ஒளிப்பதிவு செய்கிறார்.
webdunia
விரைவில் படப்பிடிப்பு தொடங்கயிருக்கும் நிலையில் அரவிந்த்சாமி, அருண் விஜய் இருவரும் வில்லன் வேடம் ஏற்க இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடல் படத்துக்குப் பிறகு நல்ல வேடத்துக்காக காத்திருக்கிறார் அரவிந்த்சாமி. அவர் வில்லனாக நடிக்கலாம். ஆனால் அருண் விஜய்...?
 
வா டீல் படம் விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில் வில்லனாக நடிக்க எப்படி ஒத்துக் கொள்வார்?
 
கேள்விகள் ஆயிரம். விரைவில் கௌதம் பதிலளிப்பார் என நம்புவோம்

Share this Story:

Follow Webdunia tamil