Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அசந்துட்டேன், மெய் மறந்தேன் - கவிப்பேரரசின் பெருமிதம்

அசந்துட்டேன், மெய் மறந்தேன் - கவிப்பேரரசின் பெருமிதம்
, திங்கள், 29 அக்டோபர் 2012 (17:45 IST)
FILE
மணிரத்னம் தனது படம் பற்றி ஒருபோதும் வாய் திறப்பதில்லை. ஏதோ சபதம் போலிருக்கிறது. மணிரத்னத்துக்குப் பதில் அந்தப் பொறுப்பை உவகையோடு ஏற்றுக் கொண்டவர் நம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். மணிரத்னம் இயக்கும் படம் முடிவை நெருங்கும் நேரத்தில் கவிப்பேரரசு படம் குறித்த தகவல்களை மெய் சிலிர்க்கும் விதத்தில் தவணைமுறையில் வெளியிடுவார். கடல் குறித்த அவ‌ரின் முதல் மெய் சிலிர்ப்பு ‌ரிலீஸாகியிருக்கிறது.

நம் கவிப்பேரரசு ஊ‌ரில் இல்லாத நேரத்தை எப்படியோ கண்டுபிடித்து மணிரத்னமும், ஏ.ஆர்.ரஹ்மானும் அவர்களாகவே மூன்று கவிதைகளை தேர்ந்தெடுத்தார்களாம். அதில் ஒன்று தண்ணீர் தேசம் என்ற கவிஞ‌ரின் காவியப் படைப்பிலிருந்து எடுத்தது. மற்ற இரண்டும் வேறு காவியங்களிலிருந்து. இந்த மூன்று கவிதைகளையும் கம்போஸ் செய்து கவிப்பேரரசு ஊர் திரும்பிய பிறகு சர்ப்பிரைஸாக அவருக்கு மணிரத்னமும், ரஹ்மானும் போட்டுக் காட்டினார்களாம். அவர்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன பெ‌ரிய வேலையிருக்கிறது?

எனது கவிதைகளை ரஹ்மானின் இசையில் கேட்டதும் அசந்துவிட்டேன், பொய்... ஸா‌ி மெய் சிலிர்த்தேன் என்று சிலிர்த்துக் கொண்டே முதல் ‌ரிலீஸை வெளியிட்டுள்ளார்.

கவிப்பேரரசின் அடுத்தடுத்த சிலிர்ப்புகளை காண இதே பக்கத்தில் காத்திருங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil