Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கௌதம் கார்த்திக் ஜோடி லாவண்யா த்ரிபாதி

Webdunia
வெள்ளி, 10 ஜனவரி 2014 (19:59 IST)
கௌதம் வாசுதேவ மேனனின் போட்டோன் கதாஸ் தயாரிக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக லாவண்யா திரிபாதி நடிக்கிறார்.
FILE

தங்கமீன்கள் படத்தை தயாரித்த கௌதம் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் படத்தை தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாரித்து வருகிறார். ஒரு வருடத்துக்கு மேல் அண்டர் புரொடக்சனில் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் இருக்கிறது. அந்தப் படம் எப்போது முடியும், எப்போது வெளியாகும் என்பது தெ‌ரியாத நிலையில் அடுத்த தயாரிப்பை தொடங்குகிறார். படத்தின் பெயர் நானும் ரவுடிதான்.

தலைநகரம் படத்தில் வடிவேலுவால் பிரபலமான நானும் ரவுடிதான் வாசகத்தையே படத்துக்கு பெயராக சூட்டியுள்ளனர். போடா போடி படத்தை இயக்கிய விஷ்ணு சிவன் இயக்கம். கௌதம் கார்த்திக் ஹீரோ. அவருக்கு ஜே ா hடியாக நடிப்பவர் லாவண்யா திரிபாதி. தெலுங்கில் ஹிட்டான அந்தால ராட்சஸி படத்தில் அறிமுகமான இவர் தற்போது பிரம்மன் படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்து வருகிறார்.

நானும் ரவுடிதான் படத்தில் லாவண்யா காதுகேளாத பெண்ணாக வருகிறார் தை திங்கள் முதல் நாள் படப்பிடிப்பை தொடங்குகிறார்கள். படத்துக்கு அனிருத் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments