Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து யூனிஸ் கான் ஓய்வு

Webdunia
திங்கள், 22 ஜூன் 2009 (10:35 IST)
இங்கிலாந்தில் நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் இலங்கையை அபாரமாக வீழ்த்தி ஐ.சி.சி. 20- 20 உலகக் கோப்பையைத் தட்டிச் சென்ற பாகிஸ்தான் அணியின் தற்போதைய கேப்டன் யூனிஸ் கான் 20 ஓவர் கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

எனினும் ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தான் தொடர்ந்து விளையாடுவேன் என்று யூனிஸ் கான் அறிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு காரணம் காட்டி பாகிஸ்தானில் வந்து விளையாட மறுக்கும் அணிகளை மீண்டும் பாகிஸ்தானில் வந்து விளையாட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த உலகக் கோப்பை வெற்றியை மறைந்த முன்னாள் பாகிஸ்தான் பயிற்சியாளர் பாப் உல்மருக்கு அர்ப்பணிப்பதாக யூனிஸ் கான் தெரிவித்தார்.

2007 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளின் போது அயர்லாந்து அணியுடன் தோல்வியுற்ற பிறகு பாப் உல்மர் அவரது விடுதி அறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியை உல்மருக்கு அர்ப்பணிப்பது பற்றி குறிப்ப்ட்ட யூனிஸ் கான் "இந்த கோப்பை பாப் உல்மருக்கு சொந்தமானது, 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு சில நல்ல விஷயங்களை அவர் பயிற்றுவித்தார், குறிப்பாக எனது சொந்த கிரிக்கெட் ஆட்டம் அவரால் முன்னேற்றம் அடைந்தது, 2005ஆம் ஆண்டின் போது பாகிஸ்தான் அணியில் நான் சீராக இடம்பெற்றதில்லை, ஆனால் பாப் உல்மர் தொடர்ந்து என்னை கேப்டனாக்குமாறு வாரியத் தேர்வாளர்களிடம் பரிந்துரை செய்தார், எனவே இந்த உலகக் கோப்பை வெற்றி பாப் உல்மருக்குரியதே" என்று யூனிஸ் கான் கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments