Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களுக்கு சச்சின் அறிவுரை

Webdunia
வியாழன், 18 ஜூன் 2009 (17:39 IST)
இங்கிலாந்தில் நடைபெறும் 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தனது உலக சாம்பியன் பட்டத்தை தக்கவைக்காதது ஒரு சராசரி இந்திய ரசிகனாக ஏமாற்றம் அளிக்கிறது என்று கூறிய சச்சின், தோல்விகளுக்கு வினையாற்றும் போது ரசிகர்கள் பொறுப்புடனும் நடு நிலையுடனும் வினையாற்றவேண்டும் என்று கூறியுள்ளார்.

" ரசிகர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறார்கள், இந்த உணர்ச்சி வசப்பட்ட செயல்கள் எங்களை சிறப்பாக விளையாட வைத்து விட முடியுமா? உண்மையில் இல்லை. ஏனெனில் இது போன்ற உணர்ச்சிமய செயல்களால் வீரர்களுக்கு மேலும் அழுத்தம் அதிகம் ஏற்பட்டு அது ஆட்டத்தில் எதிரொலிக்கும், ரசிகர்கள் முதிர்ச்சியுடனும், பொறுப்புடனும் செயல் படவேண்டும்

கடந்த காலத்தை யாரும் மாற்ற முடியாது, ஆனால் அவற்றிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தில் சிறப்பாக செயல் பட முடியும், வெற்றி, தோல்வி ஆகிய இரண்டிற்கும் நாம் வினையாற்றும் போது பொறுப்புடனும், நடு நிலையுடனும் வினையாற்றுவதே சிறந்தது".

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் செய்தி தொலைக்காட்சி சானல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments