இங்கிலாந்தில் நடைபெறும் ஐ.சி.சி. மகளிர் 20- 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 94 ரன்களுக்கு சுருட்டிய இந்திய மகளிர் அணி பின்பு மிதாலி ராஜின் அபாரமான 32 ரன்களால் 16.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.
டான்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை மகளிர் அணி முதலில் பேட் செய்தது. தார், சுல்தானா, ஜுலன் கோஸ்வாமி, ஷர்மா, மல்ஹோத்ரா ஆகியோர் அடங்கிய இந்திய பந்து வீச்சிற்கு ஈடு கொடுக்க முடியாமல் இலங்கை அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்களை மட்டுமே எடுத்தது.
இலங்கை மகளிர் அணியில் ரஸஞ்சிகா மட்டுமே அதிகபட்சமாக 24 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியில் மித வேகப் பந்து வீச்சாளர் தார் 4 ஓவர்களில் 4 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
மற்றொரு ஆட்டத்தில் நியூஸீலாந்து மகளிர் அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.