Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகளிர் இருபது-20 உலகக்கோப்பை: இங்கிலாந்து சாம்பியன்

Webdunia
ஞாயிறு, 21 ஜூன் 2009 (17:58 IST)
மகளிருக்கான இருபது-20 உலகக்கோப்பைத் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை இங்கிலாந்து மகளிரணி கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நியூஸீலாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்றது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடந்த இறுதிப்போட்டியில் பூவா-தலையா வென்ற இங்கிலாந்து மகளிரணி, முதலில் நியூஸீலாந்தை பேட் செய்யக் கேட்டுக்கொண்டது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பேட்ஸ ், டோலன் களமிறங்கினர். இதில் பேட்ஸ் ஒரு ரன்னில் வெளியேறினார்.

முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய அணித்தலைவி வாட்கின்ஸ் 2 ரன்னில் அவுட் ஆனார். இதனால் 10 ரன்களுக்குள் 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்து நியூஸீலாந்து தடுமாறியது.

அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால ், நியூஸீலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 85 ரன் மட்டுமே எடுத்தது. சட்டெர்த்வெய்டி அதிகபட்சமாக 19 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து தரப்பில் ப்ரன்ட் 3 விக்கெட்டுகளும ், ஷ ா, குன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

வெற்றி பெற 86 ரன்கள் மட்டுமே தேவை என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அண ி, 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் எடுத்து சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

துவக்க ஆட்டக்காரர்கள் டெய்லர் 23 ரன்கள், எட்வர்ட்ஸ் 9 ரன்கள் எடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு களமிறங்கிய க்ளாரி டெய்லர் 39 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுமுனையில் குன் 2 ரன்களுடன் இருந்தார்.

இங்கிலாந்து அணியின் ப்ரன்டுக்கு ஆட்டநாயகி விருதும், எஸ்.சி.டெய்லருக்கு தொடர் நாயகி விருதும் வழங்கப்பட்டது. முடிவில் இரு அணி வீராங்கனைகளுக்கும் நினைவுப் பதக்கம் அளிக்கப்பட்டது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments