Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூ‌ஸீலா‌ந்தை ‌வீ‌ழ்‌த்‌தி அரை‌யிறு‌‌தி‌க்கு செ‌ன்றது இங்கிலாந்து

Webdunia
செவ்வாய், 11 மே 2010 (10:48 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி சூ‌ப்ப‌ர ் 8 ஆ‌‌ட்ட‌த்த‌ி‌ல ் ‌ நியூ‌ஸீலா‌ந்த ு அ‌ணிய ை இ‌ங்‌கிலா‌ந்த ு அ‌ண ி 3 ‌ வி‌க்கெ‌ட ் ‌ வி‌த்‌தியாச‌த்த‌ி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றத ு. இத‌ன ் மூல‌ம ் இ‌ங்‌கிலா‌ந்த ு அ‌ண ி அரை‌யிறு‌தி‌க்க ு செ‌ன்றத ு.

' இ' பிரிவில் நே‌‌ற்‌றிரவ ு நடந்த சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூ‌ஸீலாந்து அணிகள் மோதின. இதில் பூவ ா தலைய ா வென்று முதலில் பேட்டிங் செய்த நியூ‌‌ஸீலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டெய்லர் 33 பந்துகளில் 44 ரன் எடுத்தார். இதில் 2 சிக்சர்களும் அடங்கும்.

பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மோர்கன் 34 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார்.

சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் 'இ' பிரிவில் நடந்த போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இதில் இங்கிலாந்து அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

பாகிஸ்தான், நியூ‌‌‌‌‌‌‌ஸீலாந்து, தென் ஆப்ரிக்கா அணிகள் 3ல் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றன. 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்தன. இதையடுத்து ரன்ரேட் அடிப்படையில் அரை இறுதிக்கு தகுதி பெறும் அணி முடிவு செய்யப்பட்டது.

இதில் நிகர ரன்ரேட் அடிப்படையில் (+0.041) பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறியது. அதைவிட குறைந்த ரன்ரேட் பெற்றிருந்த நியூ‌ஸீலாந்து (-0.373), தென் ஆப்ரிக்கா (-0.617) அணிகள் போட்டியை விட்டு வெளியேறின.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments