இங்கிலாந்தில் நடைபெறும் மகளிர் 20- 20 ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு சவாலான 146 ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது நியூஸீலாந்து மகளிர் அணி.
நியூஸீலாந்து அணியின் கேப்டன் வாட்கின்ஸ் மிகச்சிறப்பாக விளையாடி 58 பந்துகளில் 10 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் சகிதிதம் 89 ரன்களை விளாசினார்.
அவருக்கு அடுத்த அதிகபட்ச ஸ்கோரான 14 ரனகளை எடுத்தவர் டிவைன்.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி 4 ஓவர்களை சிக்கனமாக வீசி 22 ரன்களை மட்டுமே கொடுத்தார் ஆனால் விக்கெட்டுகள் எதனையும் கைப்பற்றவில்லை.
ஷர்மா 4 ஓவர்களில் 21 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இடைவேளைக்கு பிறகு இந்திய மகளிர் அணி களமிரங்குகிறது.