Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விக்கு ஐ.பி.எல். பார்ட்டியே காரணம்: தோ‌னி

Webdunia
வியாழன், 13 மே 2010 (10:52 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் மோசமான செயல்பாட்டிற்கு ஐ.பி.எல். பார்ட்டிகள ே காரணம் என்று தோ‌ன ி விளக்கம் அளித்துள்ளார்.

செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய போத ு இதன ை தெ‌ரி‌வி‌த் த அ‌வ‌ர ், வீரர்களை பொறுத்தவரை உடல்தகுதியும், புத்துணர்ச்சியும் முக்கியம். இந்திய அணியில் பெரும்பாலான வீரர்கள் உடல்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் இருந்தனர். உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு ஐ.பி.எல். காரணம் கிடையாது. அதே சமயம் வீரர்கள் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம் எ‌ன்றா‌ர ்.

ஏனெனில் ஐ.பி.எல். என்பது கிரிக்கெட் மட்டுமே கிடையாது. அதை சுற்றி நடக்கும் மற்ற விஷயங்களிலும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். நமது உடலுக்கு நாம் மதிப்பு அளிக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் ஐ.பி.எல். கடும் சோர்வை உண்டாக்கி விடும் எ‌ன்று‌ம ் தோ‌ன ி கூ‌றினா‌ர ்.

ஐ.பி.எல்-‌லில் இரவில் நடக்கும் கிரிக்கெட்டை முடித்து விட்டு, அதன் பிறகு நள்ளிரவு விருந்தில் பங்கேற்று விட்டு, மறுநாள் உடனடியாக பயணம் மேற்கொள்ளும் போது உடலில் இருந்து நிறைய சக்தி உறிஞ்சப்படும். எனவே கிரிக்கெட் மட்டுமல்லாமல், தனிப்பட்ட முறையில் உடலை கவனிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். மொத்தத்தில் ஐ.பி.எல். பார்ட்டிகள் வீரர்களின் கவனச்சிதறலை ஏற்படுத்துகிறது. இது இந்திய அணியையும் பாதித்து விட்டது எ‌ன்றா‌ர ் தோ‌ன ி.

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு தயாராவதற்கு ஐ.பி.எல். கிரிக்கெட் ஒரு பின்னடைவாக இருந்தது என்று சொல்ல மாட்டேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் உலக கோப்பை போட்டிக்கு தயாராவதற்கு ஐ.பி.எல். எங்களுக்கு உதவியாகத்தான் இருந்தது. சுரேஷ் ரெய்னா, ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, பிரக்யான் ஓஜா, அமித் மிஸ்ரா போன்ற வீரர்களை ஐ.பி.எல். போட்டி தான் வெளிச்சம் போட்டு காட்டியது. இதே போல் நிறைய திறமையான வீரர்களை வெளியே கொண்டு வந்துள்ளது எ‌ன்றா‌ர ்.

20 ஓவர் உலக கோப்பை போட்டியையும், ஐ.பி.எல். கிரிக்கெட்டையும் தனித்தனியாக நடத்த வேண்டும். அப்போது தான் உலக கோப்பை தோல்விக்கு ஐ.பி.எல். காரணமா? என்பன போன்ற கேள்விகள் எழும்பாது. கடந்த முறையும் இது போன்ற கேள்வித்தான் கேட்டார்கள் எ‌ன்ற ு தோ‌ன ி கூ‌றினா‌ர ்.

நல்லவேளையாக அடுத்த முறை ஐ.பி.எல். போட்டிக்கு முன்பாக 2011ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் வருகிறது. அதன் பிறகு தான் ஐ.பி.எல். நடக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டி இருக்க வாய்ப்பில்லை. எனவே அடுத்த முறை இது போன்ற கேள்விகளை கேட்க முடியாது எ‌ன்ற ு தோ‌ன ி தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

உலக கோப்பை தோல்வியால் நிறைய விமர்சனங்கள் எழும். அதை பற்றி நான் கவலைப்படமாட்டேன். எங்களால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட்டோம். நாங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம். இது போன்று விமர்சனங்கள் செய்பவர்களை விட நாட்டை அதிகமாக மதிக்கிறோம்.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணியின் பேட்டிங் இறுதிகட்டத்தில் உண்மையிலேயே அபாரமாக இருந்தது. அதே போல் 13வது ஓவருக்கு பிறகு பந்து வீச்சும் அருமையாக இருந்தது. குறிப்பாக கடைசி 4-5 ஓவர்களில் அவர்கள் எங்களை நன்கு கட்டுப்படுத்தி விட்டார்கள். இதனால் நாங்கள் ரன் எடுக்க சிரமப்பட்டோம். அவர்கள் யார்க்கராவும், ஆப்-ஸ்டெம்புக்கு வெளியேயும் பந்து வீசினார்கள். துல்லியமான யார்க்கரை நாம் ஒன்றும் செய்ய முடியாது. மிடில் ஓவர்களில் நானும், ரெய்னாவும் முடிந்த வரை அடித்து பார்த்தோம். அது கடினமாக இருந்தது.

பேட்டிங்தான் எங்களது பலம். நாங்கள் இன்னும் சிறப்பாக விளையாடி இருக்க வேண்டும். நாங்கள் எங்களது திறமைக்கு ஏற்ப ஆடவில்லை. அது ஏன் என்று சொல்ல முடியவில்லை. இருக்கிற வீரர்களில் சிறந்த 20 ஓவர் அணியை தான் பெற்றிருக்கிறோம். இருப்பினும் ஷேவாக், ஜாகீர்கான், பிரவீன்குமார் போன்ற வீரர்கள் இல்லாமல் ஆடுவது கடினமாகும்.

நமது அணியில் இளைஞர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான வீரர்களுக்கு ஷாட்-பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் பிரச்சனை இருக்கிறது. இதனை நாம் உதாசீனப்படுத்தக்கூடாது. ஆனால் நமது அணியில் மணிக்கு 145 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்துக்கு சீராக பந்து வீசக்கூடிய பவுலர்கள் இல்லை.

இதே போல் இந்தியாவில் பெரும்பாலான ஆடுகளங்களில் பந்துகள் அதிக உயரத்துக்கு எழும்பாது. நாங்கள் ஷாட் பிட்ச் பந்துகளில் சிறப்பாக ஆடுவதில்லை என்று கூறுகிறார்கள். அதே சமயம் நாங்கள் சுழற்பந்து வீச்சில் நன்றாக ஆடக்கூடியவர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. 20 ஓவர் கிரிக்கெட்டை பொறுத்தவரை எல்லா ஷாட் பிட்ச் பந்துகளையும் நாம் விட்டு கொண்டிருக்க முடியாது. நமது அணி திறமையான அணி தான். இரண்டு அல்ல மூன்று தொடர்கள் மோசமாக அமைந்திருக்கிறது. ஆனால் மற்ற போட்டிகளில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்திருக்கிறோம் எ‌ன்ற ு தோ‌ன ி கூறினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

Show comments