தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக் குறைந்த ரன்களான 130 ரன்களையும் எடுக்க முடியாமல் 20- 20 உலகக் கோப்பை போட்டிகளில் பரிதாப தோல்வி தழுவி வெளியேறிய நிலையில் நேற்று தோனி பேச வரும்போது ரசிகர்கள் அவர் மீது வெறுப்பைக் குறிக்கும் கூப்பாடு ஒலிகளை எழுப்பினர்.
"இது ஒன்றும் எனக்கு புதிதல்ல, 2007 உலகக் கோப்பையில் தோல்வி (நியூஸீலாந்துக்கு எதிராக) அடைந்த போது எனக்கு இறுதிச் சடங்கையே நடத்தி முடித்தனர். இதனால் ஒன்றும் வருத்தம் இல்லை, இது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அளவைக் காண்பிக்கிறது" என்று கூறிய தோனி இது பற்றி எந்த வித வருத்தத்தையும் வெளிப்படுத்தவில்லை.
"சில ஆண்டுகளுக்கு முன் மூத்த வீரர் ஒருவர் என்னிடம் கூறினார், உன்னை ஒருவர் புகழ்கிறார் என்றால் நீ உடனே எழாவது சொர்க்கத்திற்கு சென்று விடாதே, ஏனெனில் அவ்வளவு உச்சத்திலிருந்து கீழே விழுந்தால், நீ தாங்க மாட்டாய், எனவே ஒரு நடு நிலையான வழியைக் கடைபிடி என்றார், அதனைத்தான் நான் முயற்சி செய்து வருகிறேன்" என்றார் தோனி.