Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடைசிபந்தில் சிக்சர் அடித்து இலங்கை வெற்றி

Webdunia
புதன், 12 மே 2010 (09:36 IST)
இருபத ு ஓவ‌ர ் உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் இந்திய அணி தோல்வி அடைந்து போட்டியை விட்டு வெளியேறியது.

இருபது‌க்க ு 20 ஓவ‌ர ் உலக கோப்பை கிரிக்கெட் போட்ட ி‌ யி‌‌ன ் சூப்பர்8 சுற்றில் 'எப்' பிரிவில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும் செயின்ட் லூசியாவில் பலப்பரீட்சை நடத்தின.

சூப்பர்8 சுற்றில் ஏற்கனவே ஆஸ ்‌ ட்ரேலிய ா, மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு ஆ‌கி ய அ‌ணிகளுட‌ன ் தோல்வி அடைந்திருந்த இந்திய அணி, இந்த போ‌ட்டி‌யி‌ல ் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள முடியும் என்ற இக்கட்டான சூழலில் களம் இறங்கியது.

இந்திய அணியில் அதிரடியாக மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. ஜாகீர்கான், விஜய், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக வினய்குமார், தினேஷ் கார்த்திக், பியுஷ் சாவ்லா சேர்க்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளர் வினய்குமாருக்கு இதுவே முதலாவது சர்வதேச போட்டியாகும்.

பூவ ா தலைய ா வெ‌ன் ற இந்திய அணியின் தலைவ‌ர ் தோ‌ன ி முதலில் பேட் செய்வதாக அறிவித்தார். இதை தொடர்ந்து தினேஷ் கார்த்திக்கும், கவுதம் கம்பீரும் தொடக்க ஆட்டக்காரர்களாக கள‌ம ் இற‌ங்‌கின‌ர். தினேஷ் கார்த்திக் 13 ரன்கள் எடுத்த நிலையில் மலிங்கா பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.

அடுத்து இறங்கிய சுரேஷ் ரெய்னா வந்த வேகத்திலேயே, அதிரடி காட்டினார். துஷாராவின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஓட விட்டார். இதனால் பவர் பிளையான முதல் 6 ஓவர்களில் இந்தியா 52 ரன்கள் விளாசியது. கம்பீரும் சிறப்பாக ஆடினார். முதல் 10 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட்டுக்கு 90 ரன்கள் எடுத்திருந்தது.

ஆனால் பிற்பாதியில் இந்திய வீரர்கள் ரன்கள் எடுக்க சிரமப்பட்டனர். அணியின் ஸ்கோர் 96 ரன்களாக உயர்ந்த போது கம்பீர ், மலிங்கா பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் சங்கக்கராவிடம் கேட்ச் ஆனார். இவ‌ர ் 3 பவு‌ண்ட‌ரியுட‌ன ் 41 ரன் எடு‌த்தா‌ர். இதை தொடர்ந்து தோ‌னி களம் இற‌ங்‌கினா‌‌ர்.

மறுமுனையில் தொடர்ந்து அபாரமாக ஆடிய சுரேஷ் ரெய்னா அரைசதத்தை கடந்து ஆட்டம் இழந்தார். ஸ்டம்பிங் மற்றும் ரன்-அவுட் ஆகிய கண்டத்தில் இருந்து தப்பிய அவர் 63 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வந்த யுவராஜ்சிங் (1) இந்த முறையும் சொதப்பினார். இறுதி கட்டத்தில் அதிரடியான பெரிய ஷாட்கள் எதுவும் அடிக்கப்படாதது பெருத்த ஏமாற்றமாக அமைந்தது. இதனால் ஸ்கோர் எதிர்பார்த்ததை விட குறைந்தது.

20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. தோனி 23 ரன்னுடன் களத்தில் இருந்தார். யூசுப் ப‌த்தான் 13 ரன் எடு‌த்து கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.

பின்னர் ஆடிய இலங்கை அணியை 144 ரன்னுக்குள் கட்டுப்படுத்தினால் மட்டுமே அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நிலையில், இந்தியா பந்து வீசியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெயவர்த்தனே (4), ஜெயசூர்யா (0) ஆகியோர் 2 ஓவருக்குள் வீழ்ந்தாலும், மிடில் வரிசையில் இலங்கை அணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடினார்கள்.

‌ தில்ஷன் 33 ரன்களும், சங்கக்கரா 46 ரன்களும் எடுத்தனர். இதன் பிறகு மேத்யூசும், கபுகேதராவும் இணைந்து இந்தியாவின் கனவை சிதைத்தனர்.

கடைசி ஓவரில் இலங்கையின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை நெஹரா வீசினார். முதல் பந்தில் மேத்யூஸ் சிக்சர் அடித்தார். அடுத்த மூன்று பந்துகளில் 4 ரன்கள் எடுக்கப்பட்டன. 5வது பந்தில் மேத்யூஸ் ரன் அவுட் ஆனார். இதனால் கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

கடைசி பந்தை எதிர்கொண்ட கபுகேதரா அட்டகாசமாக சிக்சருக்கு விளாசி பிரமிக்க வைத்தார். இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 167 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. கபுகேதரா 37 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

சூப்பர்8 சுற்றில் இந்தியா தொடர்ந்து சந்தித்த மூன்றாவது தோல்வியாகும். இதன் மூலம் முன்னாள் சாம்பியன் இந்திய அணி போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 4 புள்ளிகளுடன் அரைஇறுதி‌க்கு செ‌ன்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

Show comments