Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ர‌ன்‌னி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ப‌ரிதாப தோ‌ல்‌வி

Webdunia
ஞாயிறு, 9 மே 2010 (09:49 IST)
20-20 உலகக ் கோப்ப ை கிரிக்கெட ் போட்டியில் நே‌ற்‌றிரவ ு நடைபெற் ற பரபரப்பா ன ஆட்டத்தில ் பாகிஸ்தான ை 1 ரன ் வித்தியாசத்தில ் நிய ூ‌‌‌ ஸீலாந்த ு வென்றத ு. இ‌ந் த தோ‌ல்‌வியா‌ல ் உலக கோப்பை கிரிக்கெட்டில் இரு‌‌ந்த ு பாகிஸ்த ா‌ ன ் வெ‌ளியே‌ற ி உ‌ள்ளத ு.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்8 சுற்றில் நே‌ற்‌றிரவ ு பார்படா‌சில் நடந்த `இ' பிரிவு ஆட்டத்தில் நியூ‌ஸீலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோதின. பூவ ா தலைய ா வென்ற பாகிஸ்தான் முதலில் நியூ‌‌ஸீலாந்தை பேட் செய்ய பணித்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய நியூ‌ஸீலாந்து அணிக்கு தொடக்க ஜோடி 34 ரன்கள் சேர்த்த போதிலும், அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. பாகிஸ்தான் 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி, நியூ‌ஸீலாந்தின் ரன்விகிதத்தை வெகுவாக கட்டுப்படுத்தியது.

20 ஓவர்களில் நியூ‌ஸீலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ‌வி‌ட்டோரி 38 ரன்களும், பிரன்டன் மெக்கல்லம் 33 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் தரப்பில் முகமது சமி, அப்துர் ரகுமான், அப்ரிடி தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

பின்னர் குறைந்த இலக்கை நோக்கி ஆடிய பாகிஸ்தானுக்கு ந ி‌ யூ‌ஸீலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். தொடக்க ஆட்டக்காரர் சல்மான் பட் ஒரு பக்கம் போராட மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இதில் அ‌ணி‌த ் தலைவ‌ர ் அப்ரிடி (11) சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டம் இழந்தார். அவரது கேட்ச்சை பிடித்த நாதன் மெக்கல்லம் பந்தை தரையில் வைத்தது போல் டி.வி. ரீப்ளேயில் தெரிந்தது.

58 ரன்னுக்குள் 5 பேர் வெளியேறிய நிலையில், சல்மான் பட்டுடன், அப்துல் ரசாக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி நெருக்கடியை படிப்படியாக குறைத்தனர். ஆனால் முக்கியமான தருணத்தில் அப்துல் ரசாக் ஆ‌ட்ட‌ம ் இழ‌ந்தா‌ர ். இவ‌ர ் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்களு‌ட‌ன் 29 ர‌ன்க‌ள் எடு‌த்தா‌ர்.

இதன் பின்னர் கடைசி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் 4 விக்கெட்டுகள் இருந்தது. பரபரப்பான 20வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் இயான் பட்லர் வீசினார். முதல் பந்தில் ரன் இல்லை. 2வது பந்தை சல்மான் பட் பவுண்டரிக்கு விரட்டினார்.

3 வது பந்தில் ரன் எடுக்கப்படவில்லை. 4வது பந்து பவுண்டரியை தொட்டது. இதனால் 2 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது. 5வது பந்தில் 'பைஸ்' வகையில் ஒரு ரன் எடுக்கப்பட்டது. இதனால் சல்மான்பட் மறுமுனைக்கு வந்தார். இதையடுத்து கடைசி பந்தை அப்துர் ரகுமான் எதிர்கொண்டார். 2 ரன் தேவையாக இருந்த நிலையில், அவர் 'டீப் ஸ்கொயர் லெக்' திசையில் அடித்த பந்தை, கப்தில் எளிதாக கேட்ச் செய்ய, திரிலிங் முடிவுக்கு வந்தது.

ஒரு ரன் வித்தியாசத்தில் நியூ‌ஸீலாந்து அணி வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்தது. சல்மான் பட் 67 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். இவ‌ர் 8 பவுண்டரி, ஒரு சிக்சர்களை ‌விளா‌சினா‌ர். 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஒரு அணி வெற்றி பெறுவது இது 4வது நிகழ்வாகும்.

இந்த வெற்றியின் மூலம் நியூ‌ஸீலாந்து அணி அரைஇறுதி வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. அதே சமயம் சூப்பர்8 சுற்றில் 2வது தோல்வியை சந்தித்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தானின் அரைஇறுதி கனவு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்தது. என்றாலும் பாகிஸ்தானுக்கு மிகச்சிறிய வாய்ப்பு ஒன்று இருக்கிறது.

அதாவது இங்கிலாந்து எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெறவேண்டும். பாகிஸ்தான் தனது கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடிக்க வேண்டும். அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், இங்கிலாந்து 3 வெற்றியுடன் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, நியூ‌ஸீலாந்து அணிகள் தலா ஒரு வெற்றி பெற்றிருக்கும். அப்போது ரன்-ரேட் அடிப்படையில் ஒரு அணி தேர்வாகும். இந்த ஒரே வழி மட்டுமே பாகிஸ்தானுக்கு உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கான்பூர் டெஸ்ட்: மழை காரணமாக இரண்டு செஷன்கள் பாதிப்பு.. இரண்டாம் நாள் ஆட்டம் கைவிடப்படுமா?

கான்பூர் டெஸ்ட்… மழையால் இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்குவதில் தாமதம்!

வீரர்களைத் தக்கவைப்பதில் இப்படி ஒரு சிக்கலா?... அணிகளுக்கு பிசிசிஐ விதிக்கும் கண்டீஷன்!

வங்கதேச ரசிகர் டைகர் ராபியை இந்திய ரசிகர்கள் தாக்கவில்லை.. காவல்துறை சார்பில் அளித்த விளக்கம்!

சி எஸ் கே அணியின் பவுலிங் பயிற்சியாளர் யார்… பரிசீலனையில் இருக்கும் மூன்று பெயர்கள்!

Show comments