Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியாவு‌க்கு இ‌ன்று வா‌ழ்வா? சாவா போ‌ட்டி

Webdunia
ஞாயிறு, 9 மே 2010 (10:00 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் வாழ்வா? சாவா? நிலைமையில் இந்திய அணி இன்று மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணியுட‌ன ் மோத இருக்கிறது.

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. 'எப்' பிரிவில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் 49 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ ்‌ ட்ரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதனால் தற்போது இந்திய அணிக்கு உச்சக்கட்ட நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

எஞ்சிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் அரைஇறுதிக்கு முன்னேற முடியும். ஒன்றில் தோற்றாலும் கிட்டதட்ட மூட்டையை கட்ட வேண்டியது தான்.

இந்த சூழலில் முன்னாள் சாம்பியன் இந்திய அணியு‌ம், மே‌ந்‌தி ய ‌ தீவ ு அ‌ணியு‌ம ் இன்று இரவு 7 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகிறது. கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதால், இது இந்தியாவுக்கு வாழ்வா? சாவா? போட்டியாகும்.

முந்தைய ஆட்டத்தில் 2 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இறங்கியதும், பூவ ா தலைய ா வெ‌ன்ற ு முதலில் ஆஸ ்‌ ட்ரேலியாவை பேட் செய்ய அழைத்ததும் இந்தியாவின் மோசமான முடிவாக அமைந்தது. எனவே இந்த ஆட்டத்தில் 3வது வேகப்பந்து வீச்சாளராக வினய்குமார் இறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரோகித் ஷர்மா ஆஸ ்‌ ட்ரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 79 ரன்கள் விளாசி தனது மீது நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறார். எனவே யூசுப் ப‌ த்தான் அல்லது ரவீந்திர ஜடேஜா ஆகியோரில் ஒருவர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.

ஆஸ ்‌ ட்ரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. குறிப்பாக ஷாட் பிட்ச் பந்துகளை எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் அவசரப்பட்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அவற்றில் இந்திய வீரர்கள் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

ஆனால் இதே ஷாட் பிட்ச் யுக்தியைத்தான் முக்கிய ஆயுதமாக மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணியு‌ம ் பயன்படுத்த திட்டமிட்டு உள்ளது. சூப்பர்8 சுற்றில் மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவுக‌ள ் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 57 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையிடம் வீழ்ந்தது. எனவே உள்ளூர் அணியான மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவுக‌‌ள ் அ‌ணி‌க்கு‌ம ் இது தான் வாழ்வா? சாவா? கட்டம் தான்.

இ‌ந்‌தியாவுட‌ன ் ‌ விளையாடுவத ு கு‌றி‌த்த ு மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவுக‌ள ் அ‌ணி‌யி‌ன ் தலைவ‌ர ் கெய்ல் கூறுகை‌யி‌ல ், எஞ்சிய இரு ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களாலும் ஷாட் பிட்ச் யுக்தியை பயன்படுத்த முடியும்.

அதே சமயம் அவற்றினை பயன்படுத்துவதில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில் இது சிறிய மைதானதாகும். இது தவிர, சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ள தரமான பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். ஆனால் எப்படி என்றாலும் எங்களது ஆட்டத்திட்டங்களை நாங்கள் உட்படுத்தி தான் ஆக வேண்டும் என்றார்.

இந்திய அணியை பொறுத்தவரை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்தே யுவராஜ்சிங் இன்னும் ஒரு பெரிய ஸ்கோரை கூட அடிக்கவில்லை. இதனால் மிடில் பகுதி பலவீனமாக காணப்படுகிறது. இன்றைய ஆட்டத்திலாவது அவர் பழைய நிலைக்கு வருவாரா? என்பதை பார்க்கலாம்.

இந்தியா- மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவு அணிகள் இதுவரை ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட்டில் (2009ஆம் ஆண்டு) மட்டுமே மோதி உள்ளன. இதில் மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவு வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாம்பியன்ஸ் ட்ராஃபிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… தொடருமா கம்மின்ஸின் ‘மிடாஸ் டச்’!

இந்திய அணிக்குக் கேப்டன் ஆகவே முடியாதா?...ஹர்திக் பாண்ட்யாவை ஒதுக்கும் தேர்வுக்குழு!

கபில்தேவ்வை சுடுவதற்காக அவர் வீட்டுக்கே துப்பாக்கியோடு சென்றேன்… யுவ்ராஜ் சிங்கின் தந்தை பகிர்ந்த தகவல்!

ஐபிஎல் தொடர் தொடங்கும் தேதி அறிவிப்பு…!

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி அறிவிப்பதில் தாமதம்!

Show comments