Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்தை வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அரையிறுதியில்

Webdunia
செவ்வாய், 16 ஜூன் 2009 (11:18 IST)
ஓவல் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை 20- 20 கிரிக்கெட் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் மழையால் பாதிக்கபட்டதால் இங்கிலாந்து எடுத்த 161 ரன்களுக்கு எதிராக மேற்கிந்திய அணிக்கு 9 ஓவர்களில் 8ஒ ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை மேற்கிந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து எடுத்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

குறைக்கப்பட்ட இலக்கை துரத்தக் களமிறங்கிய மேற்கிந்திய அணி கெய்ல் விக்கெட்டையும் பிளெட்சர் விக்கெட்டையும், சிம்மன்ஸ் விக்கெட்டையும் இழந்து 3-வது ஓவர் முதல் பந்தில் வெறும் 16 ரன்களையே எடுத்திருந்தது.

அதன் பிறகு அபாய வீரர் டிவைன் பிராவோ களமிறங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 13 பந்துகளில் 18 ரன்களை விளாச ஸ்கோர் 4.4 ஓவர்களில் 41 ரன்களாக உயர்ந்தது. பிறகு 45 ரன்கள் இருந்தபோது பிராவோ ஆட்டமிழந்தார். இதனால் 22 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற ஒரு தடுமாற்றமான சூழ் நிலை ஏற்பட்டது.

ஆனால் ராம் நரேஷ் சர்வாணும், சந்தர்பாலும் இணைந்து அடுத்த 3 ஓவரில் இலக்கை எட்டினர்.

10 பந்துகளை சந்தித்து சந்தர்பால் ஒரு பவுண்டரியுடன் 17 ரன்களை எடுத்தார். சர்வாண்ல் 9 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 19 ரன்கள் எடுத்து இருவரும் ஆட்டமிழக்காமல் வெற்றி பெறச் செய்தனர். இங்கிலாந்து சற்றே மரியாதையுடன் இந்த உலகக் கோப்பையிலிருந்து வெளியேறியது அந்த அணிக்கு ஆறுதலாக இருந்திருக்கும்.

முன்னதாக டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட் செய்தது. லூக் ரைட் ஷாட் பிட்ச் பந்தில் வெளியேற, ரவி பொபாராவும், கெவின் பீட்டர்சனும் இணைந்து 5 ஓவர்களில் 56 ரன்கள் சேர்த்தனர்.

19 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்த கெவின் பீட்டர்சன் சிம்மன்ஸ் பந்தில் டீப் மிட்விக்கெட் திசையைல் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஷா களமிறங்கி ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 18 ரன்களில் ஆட்டமிழந்தார். பொபாரா 47 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். காலிங்வுட் 11 ரன்களையும், ஜேம்ஸ் ஃபோஸ்டர் 13 ரன்களையும் கிரேம் ஸ்வான், பிராட் ஆகியோர் முறையே 10 ரன்களையும் சேர்க்க இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஆட்ட நாயகனாக சர்வாண் தேர்வு செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments