Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரை‌‌யிறுதி‌க்கு செ‌ல்லுமா இ‌ந்‌தியா: இலங்கையுட‌ன் இன்று மோதல்

Webdunia
செவ்வாய், 11 மே 2010 (09:47 IST)
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்றில் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி இன்று இலங்கையை எதிர்கொள்கிறது. இ‌தி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ல ் ம‌ட்டும ே இ‌ந்‌தி ய அ‌ணி‌க்க ு அரை‌யிறு‌தி‌க்க ு செ‌ல் ல வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளத ு. அதுவு‌ம் ர‌ன் ரே‌ட் அடி‌ப்படை‌யி‌ல்தா‌ன் இது நட‌க்கு‌ம்.

மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீ‌வி‌ல ் நடந்து வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. சூப்பர ்-8 சுற்றில் `எப்' பிரிவில் கடைசி லீக் ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

இதில் செயின்ட் லூசியாவில் நடைபெறும் ஒரு ஆட்டத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்டரேலியா- மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு அணிகள் சந்திக்கின்றன.

' எப்' பிரிவில் ஆஸ ்‌ ட்ரேலியா, இலங்கை, மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவு, இந்தியா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன. இதில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்கள் பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். சூப்பர ்-8 சுற்றில் தொடர்ந்து 2 வெற்றி கண்ட ஆஸ ்‌ ட்ரேலியா 4 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு முன்னேறியது.

இந்திய அணி சூப்பர ்- 8 சுற்றில் ஆஸ ்‌ ட்ரேலிய ா, மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு அரை இறுதி வாய்ப்பு மங்கிய நிலையில் உள்ளது. இந்திய அணியின் நிகர ரன் ரேட் -1.575 ஆகும்.

இலங்கை அணி 2 ஆட்டத்தில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் -0.600 ஆகும். மற்றொரு அணியான மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு 2 ஆட்டத்தில் ஆடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 2 புள்ளிகள் (நிகர ரன் ரேட் -1.075) பெற்று இருக்கிறது.

புள்ளி கணக்கை தொடங்காத இந்திய அணி அரை இறுதி வாய்ப்பை இழந்த நிலையில் காணப்பட்டாலும், அரை இறுதி வாய்ப்பு அடியோடு போய்விட்டது என்று சொல்ல முடியாது. ஏதாவது அதிசயம் நிகழ்ந்தால் இந்திய அணி அரை இறுதிக்குள் நுழையலாம்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, மிகப்பெரிய வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடிக்க வேண்டும். அதே நேரத்தில் மே‌ற்‌‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு அணி, ஆஸ ்‌ ட்ரேலியாவிடம் மோசமான தோல்வியை சந்திக்க வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா, இலங்கை, மே‌ற்‌‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு அணிகள் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது அணிகளின் நிகர ரன் ரேட் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். அதில் இந்திய அணி நல்ல ரன் ரேட்டுடன் இருந்தால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.

இன்றைய ஆட்டத்தில் இந்தியா வென்று, மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு அணி, ஆஸ ்‌ ட்ரேலியாவை வீழ்த்தினால் ஆஸ ்‌ ட்ரேலியாவுடன் இணைந்து மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு அணி அரை இறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தோல்வி கண்டு, ஆஸ ்‌ ட்ரேலியா, ம‌ே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவ ு வீழ்ந்தால் ஆஸ ்‌ ட்ரேலியா, மே‌ற்‌கி‌ந்‌தி ய ‌ தீவு, இலங்கை ஆகிய அணிகள் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது ரன் ரேட் கணக்கில் கொள்ளப்படும். ஆஸ ்‌ ட்ரேலிய அணி நல்ல ரன் ரேட்டுடன் இருப்பதால் அந்த அணியின் அரை இறுதி வாய்ப்பில் சிக்கல் வராது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments