Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அயர்லாந்துடன் போராடி வென்றது இலங்கை

Webdunia
திங்கள், 15 ஜூன் 2009 (11:03 IST)
இங்கிலாந்தில் நடைபெறும் இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டியின் சூப்பர்- 8 சுற்று ஆட்டத்தில் இலங்கை 144 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட, இலக்கை துரத்திய அயர்லாந்து அணி 135 ரன்களை எடுத்து தோல்வி தழுவினாலும், இலங்கை அணிக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது.

டாஸ் ஜெயித்து பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணியின் வலுவான பேட்டிங் வரிசையை தொடக்கத்திலேயே அயர்லாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் தகர்த்தனர். தொடக்க ஆட்டக்காரர் தில்ஷனும் (0), 2-வது விக்கெட்டுக்கு உள்ளே வந்த கேப்டன் சங்கக்கராவும் (3 ரன்) 4-வது ஓவருக்குள் வெளியேற்றப்பட்டனர்.

இதன் பின்னர் முன்னாள் கேப்டன்கள் ஜெயசூர்யாவும், ஜெயவர்த்தனேவும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஜெயசூர்யா 27 ரன்கள் (27 பந்து, 5 பவுண்டரி) எடுத்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஜெயவர்த்தனேவின் நேர்த்தியான ஆட்டம் அணி கவுரவமான ஸ்கோரை பெறுவதில் உறுதுணையாக இருந்தது. ஆனால் மறுமுனையில் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்ததால் 150 ரன்களை தாண்ட முடியவில்லை. ஜெயவர்த்தனே 78 ரன்கள் (53 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) குவித்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்தது.

அயர்லாந்து அணி தரப்பில் அலெக்ஸ் குசாக் 18 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். கடைசி பந்தில் மென்டிசின் கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால், குசாக்கின் விக்கெட் எண்ணிக்கை 5-ஆக உயர்ந்திருக்கும். மெக்கல்லன், ராங்கின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

ICC Twenty 20 World Cup Cricket, Ireland, Srilanka, Jeyawardene, Sangakkara, Johnston, Muralidaran, Mendis, Malinga

Ireland pressurised Srilanka and lost the match

அடுத்து 145 ரன்கள் இலக்குடன் கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு, நியால் ஓ பிரையன் ஆகியோர் அயர்லாந்தின் இன்னிங்சை தொடங்கினார்கள். அவர்கள் விக்கெட்டை பறிகொடுக்காமல் பொறுப்புடன் ஆடினார்கள். 9 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் சேர்த்தனர்.

நீண்ட நேரம் விக்கெட் எதுவும் விழாததால் இலங்கை வீரர்கள் ஒரு வித பதற்றத்தில் காணப்பட்டனர். இந்த சூழலில் 10-வது ஓவரில் முரளிதரன் பந்தில் போர்டர் பீல்டு (31 ரன், 29 பந்து, 5 பவுண்டரி) சங்கக்கராவிடம் கேட்ச் ஆனார்.

அவருக்கு பிறகு ஆணட்ரூ ஒயிட்டும், சிறிது நேரம் இலங்கையின் பதட்டத்தை அதிகரித்தார். ஒரு கட்டத்தில் அயர்லாந்து அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 58 ரன்கள் தேவைப்பட்டன. அப்போது கைவசம் 8 விக்கெட்டுகளுடன் வலுவான நிலையில் இருந்தது.

ஆனால் அதன் பிறகு இலங்கை பவுலர்களின் தாக்குதலில் நிலைகுலைந்தனர். ஒயிட் 22 ரன்களில் (21 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அந்த அணியின் நம்பிக்கை சகோதரர்கள் கெவின் ஓ பிரையன் (0), நியால் ஓபிரையன் (31 ரன், 37 பந்து, 4 பவுண்டரி) இருவரையும் ஒரே ஓவரில் மென்டிஸ் காலி செய்தார்.

இதே போல் மலிங்காவும் மிரட்டலை முறியடித்தார். இதனால் ஆட்டம் இலங்கை பக்கம் திரும்பியது. என்றாலும் இறுதி கட்டத்தில் மீண்டும் ஒரு முறை அயர்லாந்து மிரட்டி பார்த்தது. கடைசி 2 ஓவரில் 36 ரன்கள் தேவையாக இருந்த போது, 19-வது ஓவரில் ஜான் மூனி 3 பவுண்டரி விரட்ட அந்த ஓவரில் 18 ரன்கள் வந்தது.

இதன் பின்னர் கடைசி ஓவரில் வெற்றிக்கும் 18 ரன்கள் தேவைப்பட்டன. ஆனால் 20-வது ஓவரை மலிங்கா சாதுர்யமாக வீசி 8 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்ததுடன், ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார். அயர்லாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை தரப்பில் மென்டிஸ், மலிங்கா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். 78 ரன்கள் குவித்த ஜெயவர்த்தனே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சூப்பர்௮ சுற்றில் இலங்கைக்கு இது 2-வது வெற்றியாகும். முன்னதாக பாகிஸ்தானையும் வீழ்த்தி இருந்தது. இதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொண்டுள்ள இலங்கை அணி கடைசி ஆட்டத்தில் நாளை நியூசிலாந்தை சந்திக்க உள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகமே எதிர்பார்த்த குத்துச்சண்டை போட்டி: மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்!

கடவுளுக்கும் கேப்டனுக்கும் நன்றி… தொடர் நாயகன் திலக் வர்மா பூரிப்பு!

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

சாதனைப் படைத்த சஞ்சு- திலக் கூட்டணி…!

Show comments