Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை காலங்களில் பன்றி‌க் காய்ச்சலை தடுக்க அரசு ரூ.4 கோடியில் திட்டம்

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2009 (09:54 IST)
'' மழை காலங்களில் பன்ற ி‌ க ் காய்ச்சல் பரவாமல் தடுக்க ரூ.4 கோடியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன'' எ‌ன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வி.கே.சுப்புராஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல ் நடைப‌ெ‌ற் ற அகில இந்திய மருத்துவ அதிகாரிகள் கூட்டமைப்பின் 12வது மாநில மாநாடு தொடர்பான கருத்தரங்கை, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் வி.கே.சுப்புராஜ் தொடங்கி வைத்து பேசுகை‌யி‌ல ், தமிழக அரசு மருத்துவமனைகளில் 3 மாதத்துக்கு மருந்து கையிருப்பு உள்ளது.

முன்பெல்லாம் தேவையான மருந்துகளை இறக்குமதி செய்தோம். இப்போது உள்நாட்டிலேயே மருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. 1980-களில் இந்தியாவில் ஆயிரம் மருந்து கம்பெனி இருந்தன. இன்று 2,000க்கும் மேற்பட்ட கம்பெனிகள் உள்ளன. இதன்மூலம் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 45 ஆயிரம் மருந்து கடைகள் உள்ளன. ''போலி மருந்துகள் விற்பனையை கண்டறிய அதிகாரிகள் பற்றாக்குறை உள்ளத ு'' என்று கூட்டமைப்பினர் தெரிவித்தனர். இந்தக் குறையை தீர்க்க, ஒரு மாதத்தில் 30 மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இதற்கான எழுத்து தேர்வு முடிந்துவிட்டது. நேரடி தேர்வு மட்டுமே நடக்க உள்ளது.

தமிழகத்தில் இப்போது 120 பேர் பன ்‌ றி‌க ் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர். சென்னை, கோவையில்தான் காய்ச்சலின் தாக்கம் அதிகம். விமான நிலையங்களில் இதுவரை 10 லட்சம் பேரை பரிசோதனை செய்துள்ளோம். மழை காலங்களில் பன்றி‌க் காய்ச்சல் பரவாமல் தடுக்க ரூ.4 கோடியில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன எ‌ன்ற ு சு‌ப்புரா‌ஜ ் கூற‌ினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Show comments